Twitter : CEO பராக் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நீக்கம் - எலான் மஸ்கின் திட்டம் என்ன?

அதிகாரிகளை நீக்குவது மஸ்கின் இலக்கு இல்லை என்றாலும் தனது இலக்கை எட்ட இவர்களை வேண்டாதவர்களாக நினைத்துள்ளார். மஸ்கின் லட்சியம் தான் என்ன? இதுவரை என்ன நடந்திருக்கிறது? இனி ட்விட்டரில் என்ன மாற்றங்கள் இருக்கும் என்பதைக் காணலாம்.
மஸ்க்
மஸ்க்Twitter
Published on

ட்விட்டர் நிறுவனத்தை சொன்னபடியே கைப்பற்றியுள்ளார் எலான் மஸ்க். கையோடு பணியில் இருந்த சி.இ.ஓ பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், தலைமை கொள்கை அதிகாரி விஜயா கடே ஆகியோரையும் பணி நீக்கம் செய்துள்ளார்.

இவர்களை நீக்குவது மஸ்கின் இலக்கு இல்லை என்றாலும் தனது இலக்கை எட்ட இவர்களை வேண்டாதவர்களாக நினைத்துள்ளார். இன்னும் 7,500 ட்விட்டர் ஊழியர்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மஸ்கின் லட்சியம் தான் என்ன ? இதுவரை என்ன நடந்திருக்கிறது? இனி ட்விட்டரில் என்ன மாற்றங்கள் இருக்கும் என்பதைக் காணலாம்.

எலான் மஸ்க் விரும்பும் ட்விட்டர்

"ட்விட்டரை வைத்து இன்னும் அதிக பணம் சம்பாதிக்க இதனை வாங்கவில்லை. இதன் மூலம் நான் அன்பு செய்யும் மனிதர்களுக்கு உதவ நினைக்கிறேன்" என்று மஸ்க் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

மஸ்க் முதல் கட்டமாக சில அடிப்படை மாற்றங்களை செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

ட்விட்டரில் இருக்கும் "ஸ்பேம் பாட்"களை (spam) நீக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

பயனர்களுக்கு கன்டென்ட்களை வழங்கும் அல்காரிதத்தை வெளிப்படையாக்குதல், வெறுப்புப் பேச்சு மற்றும் பிரிவினை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்காமல் இருத்தல் போன்றவை அவரது குறிக்கோள்கள்.

அத்துடன் ட்விட்டரில் தணிக்கையை (சென்சார்ஷிப்) மட்டுப்படுத்தினாலும் இவறை அடைய முடியும் என்பது மஸ்கின் நம்பிக்கையாக இருக்கிறது.

பராக் அகர்வால் உள்ளிட்ட ட்விட்டரின் முன்னணி அதிகாரிகள் தன்னையும் ட்விட்டரையும் தவறாக வழிநடத்துவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். அவர்கள் ட்விட்டரின் சான் பிரான்சிஸ்கோ தலைமை அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ட்விட்டரை வாங்கிய மஸ்க்

கடந்த ஏப்ரல் மாதம் அதிரடியாக ட்விட்டரை வாங்கப்போவதாக அறிவித்தார் எலான் மஸ்க். இதற்காக வெளிப்படையாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை பேசினார்.

இந்த தகவலுடன் கடந்த ஜனவரியிலிருந்தே மஸ்க் ட்விட்டர் பங்குகளை வாங்கி, 9.2% பங்குகளுடன் பெரிய பங்குதாரராக இருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி அதிர்ச்சி அளித்தது.

அடுத்த சில வாரங்களில் தான் வாங்கப் போவதில்லை என மாற்றிக்கூறினார். ட்விட்டரில் அதிகாரிகளால் சொல்லப்பட்டதை விட அதிகமான போலிக்கணக்குகள் இருப்பதாகவும் தன்னிடம் இருந்து இவற்றை மறைத்து விட்டதாகவும் கூறினார்.

ஆனால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்கவே மஸ்க் இப்படிக் கூறுவதாக ட்விட்டர் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இறுதியாக அக்டோபர் 28ம் தேதிக்குள் இந்த ஒப்பந்தத்தை முடித்து வைக்க எலான் மஸ்குக்கு காலக்கெடு விதித்தது நீதிமன்றம்.

மஸ்க் அதிகமான விலைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டார் என நிபுணர்கள் விமர்சித்தனர். இருந்தாலும் இறுதியாக ட்விட்டரை முழுவதுமாக வாங்கிக்கொண்டார் எலான் மஸ்க்.

ட்விட்டரில் வரப்போகும் மாற்றங்கள் என்னவாக இருக்கும்?

ட்விட்டர் உரிமையாளராக ஆனதிலிருந்து எலான் மஸ்க் தனது திட்டங்களைப் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய ட்விட்டர் ஹேண்டிலில் சீஃப் ட்விட் என சேர்த்துள்ளார்.

ட்விட்டர் விளம்பரதாரர்கள் மற்றும் பணியாளர்களை அச்சத்திலிருந்து விடுவிக்கும் விதமாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "ட்விட்டர் எல்லா மோசமான விஷயங்களுக்கும் சுதந்திரமானதாக இருக்காது. ஆனால் விளைவுகளை ஏற்படுத்தாத எல்லாவற்றையும் அங்கு விவாதிக்கலாம்" என்று கூறியுள்ளார்.

மஸ்க்
Twitter: Bioவை மாற்றிய மஸ்க்; கையில் sink உடன் தலைமையகத்திற்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்

" ட்விட்டரின் நீண்டகால சாத்தியங்கள் அதன் தற்போதைய மதிப்பை விட மிக அதிகம் என நான் பார்க்கிறேன்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் மஸ்க்.

மேலும், ட்விட்டரை ஷாபிங் முதல் பண பரிவர்த்தனை வரை செய்யக் கூடிய "சூப்பர் ஆப்"ஆக உருவாக்குவதே தனது கனவு எனவும் கூறியுள்ளார்.

மீண்டும் வருவாரா டொனால்ட் ட்ரம்ப்?

அமெரிக்க அரசை விமர்சித்ததற்காக ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டார் டொனல்ட் ட்ரம்ப். அவரை மீண்டும் அனுமதிப்பது எலான் மஸ்க்கின் முடிவு என்றாலும் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டருக்கு திரும்புவதாக இல்லை. அவர் ட்ரூத் சோசியல் என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார்.

மஸ்க்
புதின் - எலான் மஸ்க் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததா? அமெரிக்க வல்லுநர் குற்றச்சாட்டு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com