ராய் பகதூர் மோகன் சிங் : 25 ரூபாயில் வாழ்வைத் தொடங்கி சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிய மனிதர்

மோகன் வீட்டுக்கு வந்த போது தான், அவரது அம்மா வெறும் 25 ரூபாயைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார். அதைக் கொண்டு மோகன் சிங் மெல்ல தன் வாழ்நாளில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார்.
Mohan Singh Oberoi
Mohan Singh OberoiTwitter

எலான் மஸ்க் முதல் அடையார் ஆனந்த பவன் வரை... எல்லோருக்கும் இருக்கும் ஒரே ஒற்றை என்ன தெரியுமா? அனைவரும் கடும் உழைப்பாளிகள். இப்படி உழைப்பை மட்டுமே நம்பி, தன் வாழ்நாளுக்குள்ளேயே ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிய ஒரு மாமனிதர் தான் மோகன் சிங் ஓபராய்.

ஓபராய் ஹோட்டல் குறித்து நம்மில் பலரும் செய்திகளிலோ/ அல்லது திரைப்படங்களிலோ பார்த்திருப்போம், படித்திருப்போம். அதன் உரிமையாளர் தான் ராய் பகதூர் மோகன் சிங் ஓப்ராய்.

இன்று இந்தியாவின் டாப் சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாக மிளிர்ந்து கொண்டிருக்கும் இக்குழுமத்துக்கு, மோகன் சிங் ஓபராய் என்கிற ஒற்றை மனிதர் தான் விதை போட்டவர்.

1898ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில், ஜேலம் மாவட்டத்தில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார் மோகன் சிங். இவர் பிறந்த ஓராண்டு காலத்துக்குள்ளேயே அவரது தந்தை காலமாகிவிட்டார்.

Mohan Singh Oberoi
Mohan Singh OberoiTwitter

மோகன் சிங்கை வளர்க்கும் பொறுப்பு அவரது தாயின் தலையில் விழுந்தது. தட்டுத் தடுமாறி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மோகன் சிங், ஒருகட்டத்தில் தன் படிப்பை நிறுத்திவிட்டு, லாஹூரில் இருந்த அவரது மாமாவின் காலணிக் கடையில் வேலை பார்க்கத் தொடங்கினார். காலப் போக்கில் இந்து இஸ்லாமியர்கள் மோதல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் தீவிரமடைந்து வந்ததால் அக்கடை விரைவில் மூடப்படும் நிலை உருவானது.

அப்படியே இஷ்ரான் தேவியைத் திருமணம் செய்துகொண்டு, அவரது மைத்துனர் வீட்டில் இருந்தபடி வேலை தேடினார் மோகன் சிங். பலன் கிடைக்கவில்லை. மீண்டும் தாய் வீட்டுக்கே வந்துவிடலாமா என்று கூட ஆலோசித்தார் மோகன். ஒருமுறை தாயைப் பார்த்துவிட்டுப் போக மோகன் வீட்டுக்கு வந்த போது தான், அவரது அம்மா வெறும் 25 ரூபாயைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார். அதைக் கொண்டு மோகன் சிங் மெல்ல தன் வாழ்நாளில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார்.

Mohan Singh Oberoi
முகமது பின் சயீத் : ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபர் - யார் இவர்? இவர் வரலாறு என்ன?
Mohan Singh Oberoi
Mohan Singh OberoiTwitter

1922ஆம் ஆண்டு, ஷிம்ளாவில் ஒரு கிளார்க்காக தி சிசில் ஹோட்டலில் வேலை கிடைத்தது. மாதம் 50 ரூபாய் சம்பளம். நீண்ட காலம் கழித்து அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு என எல்லாம் சேர்ந்து அவரை உற்சாகமாக உழைக்க வைத்தது. மோகனும் பிரமாதமாக உழைத்தார். ஹோட்டல் துறையிலும், வியாபாரத்திலும் உள்ள நெளிவு சுழிவுகளை சடசடவென கற்றுக் கொண்டார்.

அதிகம் படிக்காதவர் என்பதால், மனிதர்கள் சார்ந்து ஹோட்டல் வியாபார விஷயத்தில் மோகன் எப்போதும் தனக்கு சரி என்று பட்டதைச் செய்த காரியங்கள் ஏராளம். அது சில நேரங்களில் தவறான முடிவுகளையும் கொடுத்தன என்பதை மறுப்பதற்கில்லை.

1934ஆம் ஆண்டு மோகன் சிங் ஓபராய் முதல் முறையாக தன் சொத்து பத்துகளை எல்லாம் அடமானம் வைத்து, மனைவியின் நகைநட்டுக்களை எல்லாம் பணயம் வைத்து 'தி கிளார்க்ஸ்' ஹோட்டலைக் கைப்பற்றினார். மீண்டும் அசுரத்தனமாக உழைக்கத் தொடங்கினார். அறைகளை எப்பாடு பட்டாவது நிரப்புவது முதல் வரும் வாடிக்கையாளர்களை நிரந்தர வாடிக்கையாளர்களாக்க முயல்வது வரை அனைத்தையும் செய்யச் சிரமப்பட்டார்.

Mohan Singh Oberoi
Mohan Singh OberoiTwitter

ஐந்தே ஆண்டுகளில் கை மேல் பலன் தெரிந்தது. அவர் பணயம் வைத்த சொத்து பத்துகளை எல்லாம் ஹோட்டல் வருமானம் வழி மீட்டிருந்தார்.

1943ஆம் ஆண்டு, ஆங்கிலேயே அரசு, இவரது சேவையைப் பாராட்டி சர் பகதூர் என்கிற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

ஒரு சாதாரண மனிதராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அப்பாடா, அரும்பாடுபட்டு ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஆகிவிட்டோம். அப்படியே வாழ்கையை ஜாலியாக கடத்திவிடலாம் என ஆசுவாசப்பட்டிருப்போம். ஆனால் மோகன் சிங் ஓபராய் அப்படி ஓயவில்லை.

மீண்டும் தன் சக்திக்கு மீறி, அப்போது கொல்கத்தா நகரத்தில் பிரபலமாக இருந்த கிராண்ட் ஹோட்டல் என்கிற 500 அறை கொண்ட ஹோட்டலை லீஸுக்கு எடுத்து நடத்தும் பணியைத் தொடங்கினார். பெரு நகரம், பெரிய ஹோட்டல் பல்வேறு சவால்களை வெளிப்படுத்தியது. அத்தனையையும் சமாளித்து, கிராண்ட் ஹோட்டல் திட்டத்தை லாபத்துக்கு கொண்டு வந்தார் மோகன் சிங்.

Mohan Singh Oberoi
Mohan Singh OberoiTwitter

இப்படி வாழ்கையில் கடும் உழைப்பை மட்டும் வைத்துக் கொண்டு, ஒரு ஹோட்டலில் கிளார்க்காக வேலை பார்க்கத் தொடங்கிய நபர், மெல்ல ஒரு ஹோட்டலின் உரிமையாளரானார். அது மெல்ல இரண்டானது. இன்று ஓபராய் குழுமம், கிட்டத்தட்ட ஐந்து நாடுகளில் 31 நகரங்களில் சொகுசு ஹோட்டல் மற்றும் ரிசார்ட்களை வைத்திருக்கிறது. இரு சொகுசு கப்பல்களையும் இயக்கி வருகிறது. இக்குழுமத்தில் சுமார் 12,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இத்தனை பிரமாண்ட சொகுசு ஹோட்டல் குழுமம், கடந்த 2008ஆம் ஆண்டு பல நாட்டுத் தலைப்புச் செய்திகளில் அடிபட்டது. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களில் மும்பையில் உள்ள பிரபல ஓபராய் ஹோட்டலும் ஒன்று.

Mohan Singh Oberoi
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு
Mohan Singh Oberoi
Mohan Singh OberoiTwitter

இன்றுவரை இந்தியாவின் ஹோட்டல் துறையின் தந்தை எனப் பெருமையாக நினைவுகூரப்படுகிறார் மோகன் சிங் ஓபராய். அந்த அளவுக்கு அவர் இத்துறைக்குச் செய்த காரியங்கள் சொல்லில் அடங்காதவை.

உலகின் பல்வேறு சமூகங்கள், அரசாங்கங்கள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தன. இந்திய அரசு, கடந்த 2001ஆம் ஆண்டு மோகன் சிங் ஓபராய்க்கு பத்ம ஶ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.

இந்திய ஹோட்டல் துறையில் பல சாதனைகளைப் படைத்த இந்த உன்னத மனிதர் கடந்த 2002 மே 3ஆம் தேதி காலமானார். தற்போது ஓபராய் ஹோட்டல் குழுமத்தை, அவரது மகன் பிரித்விராஜ் சிங் ஓபராய் தான் தலைவராக இருந்து நிர்வகித்து வருகிறார்.

Mohan Singh Oberoi
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com