இந்த உலகிற்கு இவர்களால் பெரும் ஆபத்து வரலாம் : எச்சரித்த பொறியாளர் - பிறகு என்ன நடந்தது?

பிளேக் லெமோயின் கடந்த மாதம் லாம்டா மனிதனைப் போன்ற உணர்வைக் காட்டுவதாகக் கூறிய போது ஊடகங்களில் பரபரப்பான தலைப்புச் செய்திகளை உருவாக்கத் தொடங்கினார்
Blake Lemoine
Blake LemoineTwitter
Published on

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கு உணர்ச்சிகள் இருப்பதாகக் கூறிய அதன் பொறியாளர் ஒருவரை கூகுள் நீக்கியுள்ளது.

கடந்த மாதம், பிளேக் லெமோயின் எனும் பொறியாளர், கூகுளின் மொழித் தொழில்நுட்பம் உணர்வுப்பூர்வமானது, எனவே அதன் "விருப்பங்களுக்கு" மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற தனது கோட்பாட்டைப் பகிரங்கப்படுத்தினார்.

கூகுள் மற்றும் பல AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள், அவரது கூற்றுக்களை மறுத்தனர். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

திரு லெமோயின் இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்ட ஆலோசனையைப் பெற்று வருவதாக பிபிசியிடம் கூறினார். இதன் பொருட்டு அவர் இந்தப் பிரச்சினை தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரியைக் குறிக்கும் LaMDA என்பது கூகுள் உருவாக்கிய உரையாடல் மொழி மாதிரிகளின் குடும்பமாகும். லாம்டாவின் முதல் தலைமுறை வெர்ஷன் 2021 ஆம் ஆண்டும், இரண்டாவது தலைமுறை வெர்ஷன் ஜூன் 2022இலும் அறிவிக்கப்பட்டது.

ஒரு அறிக்கையில், உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி (லாம்டா) பற்றிய திரு லெமோயின் கூற்றுக்கள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்றும், இதை தெளிவுபடுத்துவதற்காக "பல மாதங்கள்" அவருடன் நிறுவனம் பணியாற்றியதாகவும் கூகுள் கூறியது.

"எனவே, இந்த தலைப்பில் நீண்ட ஈடுபாடு இருந்த போதிலும், பிளேக் லெமோயின் இன்னும் தெளிவான பணியிடம் மற்றும் தயாரிப்புத் தகவலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உள்ளடக்கிய தரவு பாதுகாப்புக் கொள்கைகளை தொடர்ந்து மீறுவதைத் தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூகுள் கூறியிருக்கிறது.

லாம்டா என்பது ஒரு திருப்புமுனை தொழில்நுட்பமாகும். இது சுதந்திரமான உரையாடல்களில் ஈடுபட முடியும் என்று கூகிள் கூறுகிறது. இது சாட்போட்களை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் கருவியாகும்.

மிக அடிப்படையான மட்டத்தில், சாட்பாட் என்பது ஒரு கணினி நிரலாகும். இது மனித உரையாடலை உருவகப்படுத்துகிறது மற்றும் செயலாக்குகிறது (எழுதப்பட்ட அல்லது பேசப்படும்). மனிதர்கள் உண்மையான நபருடன் தொடர்புகொள்வது போல டிஜிட்டல் சாதனங்களுடன் தொடர்பு கொள்ள சாட்பாட் அனுமதிக்கிறது.

பிளேக் லெமோயின் கடந்த மாதம் லாம்டா மனிதனைப் போன்ற உணர்வைக் காட்டுவதாகக் கூறிய போது ஊடகங்களில் பரபரப்பான தலைப்புச் செய்திகளை உருவாக்கத் தொடங்கினார். இது செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மனிதர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்ய வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்த விவாதத்தைத் தூண்டியது.

கூகுளின் பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக் குழுவில் பணியாற்றிய திரு லெமோயின், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம், இத்தொழில்நுட்பம் பாரபட்சமான அல்லது வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துகிறதா என்பதைச் சோதிப்பதே தனது வேலை என்று கூறினார்.

லாம்டா சுய விழிப்புணர்வைக் காட்டியதோடு மதம், உணர்ச்சிகள் மற்றும் அச்சங்கள் பற்றிய உரையாடல்களை நடத்த முடியும் என்று அவர் கண்டார். லாம்டாவின் ஈர்க்கக்கூடிய வாய்மொழித் திறன்களுக்குப் பின்னால் ஒரு உணர்வுப்பூர்வமான மனமும் இருக்கலாம் என்று திரு லெமோயின் நம்புவதற்கு இது வழிவகுத்தது.

இதையடுத்து அவரது கண்டுபிடிப்புகள் கூகுளால் நிராகரிக்கப்பட்டதோடு நிறுவனத்தின் இரகசியக் கொள்கையை மீறியதற்காக அவர் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் விடுவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் திரு லெமோயின் தானும் மற்றொரு நபரும் லாம்டாவுடன் நடத்திய உரையாடலைத் தனது கருத்துக்களுக்கு ஆதரவாக வெளியிட்டார்.

கூகுள் தனது அறிக்கையில், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான வளர்ச்சியை "மிகவும் தீவிரமாக" எடுத்துக் கொள்வதாகக் கூறியதோடு இதை விவரிக்கும் கருத்துக்களை வெளியிட்டது. நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பற்றிய எந்தவொரு பணியாளர் கவலையும் "விரிவாக" மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும், லாம்டாவிற்காக 11 மதிப்பாய்வுகளை மேற்கொண்டதாகவும் அது மேலும் கூறியது.

இறுதியில் கூகுளின் அறிக்கை"பிளேக் நலமடைய வாழ்த்துகிறோம்" என்று முடிகிறது.

திரு லெமோயின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பதாகக் கூறிச் சென்ற முதல் செயற்கை நுண்ணறிவு பொறியாளர் அல்ல. கடந்த மாதம், மற்றொரு கூகுள் ஊழியர் தி எகனாமிஸ்டு பத்திரிகையுடன் இதே போன்ற எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் அதாவது எந்திரங்கள்தான் இந்த உலகை ஆளப்போகிறது என்பதை தி மேட்ரிக்ஸ் உள்ளிட்டு பல திரைப்படங்கள் கதைப் பொருளாகக் கொண்டு வெளி வந்திருக்கின்றன. தற்போது லெமோயின் கூறுவதைப் பார்த்தால் அது உண்மைக்கு நெருக்கமாக யதார்த்தத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. எனில் இனி நாம் கணினியில் எந்திரத்துடன் பேசுகிறோமா இல்லை ஒரு மனிதனோடு பேசுகிறோமா என்ற குழப்பம் வரும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து விடும். அது உருவாக்க இருக்கும் சமூக விளைவுகளை இப்போது விவரிக்க முடியாது.

Blake Lemoine
கூகுள், டெஸ்லா, ஆப்பிள்: செலவை குறைக்க திட்டம் - என்ன நடக்கிறது உலகச் சந்தையில்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com