டாடா குழுமம் வரலாறு : ஆசியாவின் காபி சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் டாடா | பகுதி 18

ஜே ஆர் டி அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், அரசியல்வாதிகள் இந்திய தொழில்துறையை விடுவில்லை
JRD Tata

JRD Tata

Facebook

Published on

இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், 1969ஆம் ஆண்டு எம்.ஆர்.டி.பி (Monopolistic restrictive Trade Practices Act) சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அச்சட்டத்தின் படி 20 கோடி ரூபாய்க்கு மேல் நிகர மதிப்பு (Networth) கொண்ட நிறுவனங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

33 சதவீத சந்தையைப் பிடித்திருக்கும் நிறுவனங்கள் மொனாபொலி நிறுவனங்கள் என்று கருதப்பட்டு, அவர்கள் என்ன உற்பத்தி செய்ய வேண்டும், என்ன அளவில் உற்பத்தி செய்ய வேண்டும், எங்கு முதலீடு செய்யலாம் என்பதை எல்லாம் அரசு தீர்மானிக்கும் என்றனர்.

G D Birla

G D Birla

Twitter

பிர்லா குழுமம் டாடாவை முந்திச் சென்றது

1972ஆம் ஆண்டில், ஒரு பங்குதாரர்கள் கூட்டத்தில், எல்லா விஷயங்களையும் அரசு தீர்மானிக்கும் என்றால், வியாபார உரிமையாளர்களுக்கு என்ன அதிகாரமிருக்கிறது? டாடாவைப் போல குறைவான அதிகாரத்தோடு உலகில் வேறு எந்த பெரிய வணிக சாம்ராஜ்ஜியமும் இருக்காது என்றும் கூறினார்.

மேலும் அரசு, சட்ட ரீதியில் சரியான வியாபாரத்தின் மீது புதிய விதிகளை விதித்து, தங்களுக்கென வர்த்தக ரீதியிலான இடத்தை உருவாக்கிக் கொள்வது நியாயமல்ல என்றும் கூறினார். இந்திரா காந்தியோ இந்த வாதங்களை எல்லாம் காதில் கூட வங்கிக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் பிர்லா குழுமம் சடசடவென டாடாவை முந்தி முன்னேறிச் செல்லத் தொடங்கியது. பிர்லா தொழிற்குழுமத்தின் பிதாமகர் ஜி டி பிர்லா, அரசியலில் இருந்து கொண்டே, தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும் கவனித்துக் கொண்டார். என்ன இருந்தாலும் இது ஒரு ஆர்ரோக்கியமான தொழிற் போட்டியாகவே பார்க்கப்பட்டது. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் ஒரு காலத்தில், டாடா குழுமத்தை விட அதிக பங்குகளை பிர்லா குழுமம் வைத்திருந்தது. ஆனால் ஒரு போதும், டாடா ஸ்டீல் நிறுவனத்தை கையகப்படுத்த பிர்லா குழுமம் முயற்சிக்கவில்லை.

JRD Tata

ஆசியாவின் முதல் பணக்காரர் : அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி

Voltas

Voltas

Twitter

நீரை குளிர்விக்கும் எந்திரம் வோல்டாஸால் நிறுவப்பட்டது

மறுபக்கம் டாடா குழுமம் சத்தமின்றி அடுத்தடுத்து இந்தியாவில் செழித்து வளர வாய்ப்புள்ள வியாபாரங்களில் காலூன்றியது.

1954ஆம் ஆண்டு, வோல்டாஸ் என்கிற பெயரில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வோல்கார்ட் சகோதரர்கள் மற்றும் டாடா குழுமம் இணைந்து ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது.

துங்கபத்ரா நதிக்கரையோரத்தில் மின் ஆலைகளை கட்டமைப்பது, ஜவுளித் துறையில் வெப்பக்காற்றை வெளியிடும் எந்திரம் என்று தொடங்கிய வோல்டாஸின் பயணம் ஏசி எந்திரத்தை எட்டியது.

வீட்டிலுள்ள அறைகளில் பயன்படுத்தப்படும் ஏசி வோல்டாஸால் மேம்படுத்தப்பட்டது. குளிர் காலத்தில் வெப்பமூட்டவும், கோடை காலத்தில் குளிரூட்டும் இந்தியாவின் முதல் கிளைமடைசர் எந்திரம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆசியாவிலேயே முதல்முறையாக, அணுசக்தி அமைப்புகளில் நீரை குளிர்விக்கும் எந்திரம் வோல்டாஸால் நிறுவப்பட்டது. 1960களில் ஓபல் ஃப்ரிட்ஜ்ஜை அறிமுகப்படுத்தியது வோல்டாஸ்.

Burj Khalifa

Burj Khalifa

Facebook

புர்ஜ் கலிஃபாவில் கூட வோல்டாஸின் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன

இந்தியாவின் முதல் அதிவேக ரயிலில் வோல்டாஸ் குளிர்சாதன வசதி பயன்படுத்தியது, 1970களின் முற்பகுதியில் ஓமனின் சுல்தானுக்குச் சொந்தமான அரண்மனையில் வோல்டாஸ் குளிர்சாதன வசதிகள் பயன்படுத்தப்பட்டது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1000 பேர் தொழும் மசூதி ஒன்றில் நான்கு நாட்களுக்குள் வோல்டாஸ் நிறுவனம் குளிர்சாதன வசதிகளை நிறுவியது, இந்தியாவின் மிகப்பெரிய சுரங்கச் சந்தை மற்றும் டெல்லியின் புகழ்பெற்ற பாலிகா பசார் வோல்டாஸால் முழுமையாக குளிரூட்டப்பட்டது என முதல் 25 ஆண்டுகளுக்குள் பல சாதனைகளைப் படைத்தது வோல்டாஸ்.

காற்றில் உள்ள ஈரப்பதத்தினாலும், அதிலுள்ள ஆக்சிஜனாலும் உணவு கெட்டுப் போகாமல் இருக்க, நைட்ரஜனைக் கொண்டு உணவு பாக்கெட்களை சீல் செய்வர். அத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வர முதல் முறையாக ஆலையை நிறுவிய நிறுவனமும் வோல்டாஸ் தான்.

இந்தியாவின் முதல் ஸ்பிலிட் ஏசி எந்திரம், சாம்சங் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து புதிய வாஷிங் மிஷின்களை இந்திய சந்தையில் களமிறக்கியது, வணிக ரீதியிலான ராட்சத குளிர்சாதன வசதிகளைக் களமிறக்கியது. அவ்வளவு ஏன் உலகப் புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபாவில் கூட வோல்டாஸின் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

Tata Coffee

Tata Coffee

Twitter

மிகப்பெரிய அளவில் காபி விளையும் எஸ்டேட்களை வைத்திருக்கும் நிறுவனம் டாடா காபி தான்

சில்லறை வணிகம் மற்றும் தொழிற்சாலை பொறியியல் தொழில்நுட்பத்துக்கு இப்படி ஒரு நிறுவனத்தை தொடங்கிய அதே டாடா குழுமம், இந்தியர்களின் டீ காபி வியாபாரத்திலும் புன்னகை பூத்தபடி களமிறங்கியது.

உலக அளவில் டீ மற்றும் காபி போன்ற பானங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தையாக இருந்த போதிலும், 1980கள் வரை இந்தியாவில் பிராண்டெட் டீ, காபிகளுக்கு அதிக இடமில்லாமல் இருந்தது. அதை டாடா அறிந்து டாடா டீயைத் தொடங்கியது. 2000வாக்கில் பிரிட்டனைச் சேர்ந்த டெட்லி குழுமத்தை வாங்கியது. இன்று உலகின் டாப் ஐந்து டீ பிராண்டுகளில் டாடா டீயும் ஒன்று. இன்று வரை உலகின் டாப் டீ உற்பத்தியாளர்களில் ஒரு நிறுவனமாக விளங்குகிறது டாடா டீ.

டீ பிரியர்களுக்கு ஓகே, காபியை கைவிட்டால் எப்படி? 1990களில் கன்சாலிடேடட் காபி என்கிற நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்கியது டாடா. 1999ஆம் ஆண்டில் ஏஷியன் காபி லிமிடெட், வீர ராஜேந்திரா எஸ்டேட்ஸ், சாரக்னி என பல எஸ்டேட்கள் மற்றும் காபி நிறுவனங்கள் கன்சாலிடேடட் காபி லிமிடெட் உடன் இணைக்கப்பட்டன.

2000வாக்கில் கன்சாலிடேடட் காபி என்கிற நிறுவனம் டாடா காபி என பெயர் மாற்றப்பட்டு, இன்று இந்திய பங்குச் சந்தையில் ஒரு தனி நிறுவனமாக வர்த்தகமாகி வருகிறது. இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் காபி விளையும் எஸ்டேட்களை வைத்திருக்கும் நிறுவனம் டாடா காபி தான்.

Starbucks Coffee

Starbucks Coffee

Twitter

டாடா எக்ஸ்போர்ட்ஸ்

2012ஆம் ஆண்டில் உலகப் புகழ்பெற்ற ஸ்டார்பக்ஸ் காபி ஷப் நிறுவனம், இந்தியாவில் தன் தடத்தைப் பதிக்க, டாடாவை தன் கூட்டாளியாகத் தேர்வு செய்து ஒரு கூட்டு நிறுவனத்தைத் தொடங்கியது. இதன் பிறகு தான் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் கடைகள் அதிக அளவில் இந்தியாவில் காலூன்றத் தொடங்கின.

அதே 1962 காலகட்டத்தில் டாடா எக்ஸ்போர்ட்ஸ் என்கிற பெயரில் தோல் பொருட்கள் தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடும் நிறுவனம் தொடங்கப்பட்டன. இன்று டாடா இன்டர்நேஷனல் என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. 1969 காலகட்டத்தில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது அது குறித்து யாரும் கவனம் செலுத்தவோ, அதன் எதிர்காலம் குறித்தோ அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்த நிறுவனம் தான் இன்று டாடா குழுமத்தின் மணிமகுடமாகத் திகழ்கிறது என்றால் மிகையல்ல.

முந்தைய பகுதியைப் படிக்க

JRD Tata

டாடா குழுமம் வரலாறு : இந்திரா காந்தியை வீழ்த்த துடித்த ஜே ஆர் டி| பகுதி 17

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com