டாடா குழுமம் : இப்படியும் ஒரு முதலாளி - ஆச்சர்ய வரலாறு | பகுதி 2

தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தி தானும் முன்னேறிய ஜாம்செட்ஜி டாடாவின் கதை
ஜாம்செட்ஜி டாடா

ஜாம்செட்ஜி டாடா

Newssense

டாடா தன் முதல் உற்பத்தி ஆலையை ஏன் நாக்பூரில் நிறுவியது? ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே ஜாம்செட்ஜி தீர்மானித்த விஷயம் என்ன? பிரமாண்ட எந்திரங்களை டாடா எப்படி ஆலைக்கு கொண்டு வந்தது? இதற்கான விடை தான் எம்பிரஸ் மில்.

மீண்டும் தொழிலுக்கு திரும்பிய டாடா

அபினிசிய படையெடுப்பில் 40 லட்சம் ரூபாய் சம்பாதித்த டாடா குழுமம் மீண்டும் தொழிலுக்குத் திரும்பியது. 1869ஆம் ஆண்டு ஓர் எண்ணெய் ஆலையை விலைக்கு வாங்கி, அதை பருத்தி ஜின்னிங் ஆலையாக மாற்றியது டாடா குழுமம்.

அலெக்சாண்ட்ரியா என்கிற பெயரில் சிறப்பாக செயல்பட்டு லாபமீட்டிக் கொண்டிருந்த ஆலையை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் விற்று வெளியேறினார் ஜாம்செட்ஜி.

1873ஆம் ஆண்டு, மீண்டும் லண்டன் மற்றும் லங்காஷேர் சென்று ஜவுளி தொழிலின் நிலையையும், தன் அறிவையும் அப்டேட் செய்து கொண்டு, நாட்டில் சொந்த பருத்தி ஆலையை நிறுவும் ஐடியாவோடு இந்தியா திரும்பினார் ஜாம்செட்ஜி.

ஜாம்செட்ஜி டாடா

டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

எம்ப்ரஸ் மில்ஸ்

எம்ப்ரஸ் மில்ஸ்

Newssense

தொழிலாளர் ரூபத்தில் வந்த பிரச்சனை

பம்பாய் மற்றும் அஹமதாபாத்தைச் சுற்றி பல பருத்தி ஆலைகள் இருந்ததால், பருத்தி விளையும் இடத்தை நோக்கி நகர்ந்தது டாடா குழுமம். அப்படி தேர்வு செய்யப்பட்ட இடம் தான் நாக்பூர்.

அவர்கள் ஆலைக்கு தேர்வு செய்த இடம் பெரும்பள்ளமாக இருந்தது. ஆலைக்கான கட்டடப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் பல லாரி மண்ணைக் கொட்டி சமன்படுத்த வேண்டி இருந்தது. இதையே காரணமாகக் கூறி ஓர் உள்ளூர் முதலீட்டார் ஆலை கட்ட பணம் கொடுக்க மறுத்தார். அதை பற்றி எல்லாம் டாடா கவலைப்படாமல் நிலத்தை சமன்படுத்தும் பணிகளைத் தொடங்கிவிட்டு, ஆலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது மற்றும் எந்திரங்களை ஆர்டர் செய்வது என அடுத்தடுத்த பணிகளில் வேகம் காட்டினார்.

ரயில்வே நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெசான்ஜி மேத்தா மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான ஜேம்ஸ் ப்ரூப்ஸ்பை ஆகியோரிடம் ஆலையை கட்டமைக்கும் மற்றும் நிர்வகிக்கும் பணிகளைக் கொடுத்தார் ஜாம்செட்ஜி.

ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே, தன் ஆலை தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒருபக்கம் ஆலை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் ஜேம்ஸ் ப்ரூக்ஸ்பையின் ஆலோசனைப்படி ப்ரூக்ஸ் அண்ட் டாக்ஸி என்கிற மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த நிறுவனத்திடம் பருத்தி ஆலைக்கான எந்திரங்களை ஆர்டர் செய்தார்.

19ஆம் நூற்றாண்டில் டாடா ஆர்டர் செய்த எந்திரங்கள் எல்லாம் ஐரோப்பாவிலிருந்து இந்தியா வந்து சேர சுமார் நான்கு மாத காலமானது. சாலை வசதிகளோ ரயில் போக்குவரத்தோ பரவலாகாத காலத்தில் எந்திரங்களை ஆலைக்குக் கொண்டு வர மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினர்.

எல்லா சிக்கல்களையும் கடந்து ஒருவழியாக டாடாவின் பருத்தி ஆலை ‘எம்ப்ரஸ் மில்ஸ்’ என்கிற பெயரில் 1977 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. அப்பாடா ஆலை தொடங்கியாகிவிட்டது என ஜாம்செட்ஜி ஓய்வாக அமர்வதற்குள், அடுத்த பெரும் பிரச்சனையை எதிர்கொண்டார். அதன் பெயர் தொழிலாளர்கள்.

பருத்தி உற்பத்தி

பருத்தி உற்பத்தி

Facebook

தொழிலாளர் மேம்பாட்டுத் திட்டம்

1875 காலகட்டத்திலேயே பம்பாய் நகரத்தில் உள்ள மக்கள், வெறுங்காலில் வெந்நீர் கொட்டியது போல ஓடிக் கொண்டிருந்தனர். தேவைப்பட்டால் விடுமுறை நாட்களில் கூட வேலை பார்க்கும் கலாச்சாரம் எல்லாம் அப்போதே பம்பாய்க்கு வந்துவிட்டது. ஆனால் நாக்பூரில் நிலைமை தலைகீழாக இருந்தது.

தொழிலாளர்களின் வருகை சராசரியாக 80 சதவீதத்தைத் தாண்டவில்லை. மகனுக்குப் பிறந்தநாளுங்க... நேத்து அமாவாசை அதான்... என மிகச்சிறிய காரணங்களுக்கு எல்லாம் தொழிலாளர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவ்வளவு ஏன் சிலர் பல வாரங்களுக்கு ஆலை பக்கம் தலைகாட்டாமல், திடீரென வேலைக்கு வரும் நிகழ்வு எல்லாம் நடந்தது. நாக்பூர் மக்கள் மத்தியில் வேலை கலாச்சாரம் குறித்த அறிவு பெரிதாக பரவி இருக்கவில்லை.

என்ன செய்யலாம் என யோசித்த ஜாம்செட்ஜி, தொழிலாளர்கள் நல்வாழ்வு திட்டங்களை அறிமுகப்படுத்தி சக நிர்வாகிகளையும், தொழிலாளர்களையும் ஆச்சர்யப்படுத்தினார்.

ப்ராவிடெண்ட் ஃபண்ட்

ப்ராவிடெண்ட் ஃபண்ட், ஆலையில் விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள காப்பீட்டுத் திட்டங்கள் என பல திட்டங்களைக் கொண்டு வந்தார். குடும்ப தினம், விளையாட்டு தினம் போன்ற தொழிலாலர்கள் மத்தியிலான நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. 1,000 குடும்பங்களுக்கு தங்க சங்கிலிகள், கைக்கடிகாரம், பண முடிப்புகள் என வாரி வழங்கி ஆலைத் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தினார்.

ஊழியர்களின், வேலையை அணுகும் விதத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. டாடாவின் தொழிலாளர்கள் நலன்சார் திட்டங்களில் சில, இங்கிலாந்தின் ஆலைச் சட்டங்களில் கூட இல்லை என்பது டாடா வரலாறு சொல்லும் சேதி.

எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்த போது, 1890களில் பருத்தி வியாபாரத்தில் திருப்தி அடையாத ஜாம்செட்ஜி டாடா, பட்டு வியாபாரத்தை உற்று நோக்கத் தொடங்கி இருந்தார்.

ஓய்வாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற போது, அங்கிருந்த தட்பவெப்பநிலை பெங்களூரு, மைசூரோடு ஒத்துப் போனதை உணர்ந்து, நாமே பட்டு தயாரித்தால் என்ன...? என கொஞ்சம் பட்டுப் புழுக்களை இந்தியாவுக்கு பார்சல் கட்டினார் ஜாம்செட்ஜி டாடா. ஆனால் அதை யார் முறையாக வளர்ப்பர் என்கிற கேள்விக்கு ஜப்பானில் விடை கிடைத்தது.

(தொடரும்)

பகுதி ஒன்றை படிக்க

ஜாம்செட்ஜி டாடா

டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com