டாடா குழுமம் வரலாறு : துரோகிகளை வீழ்த்திய ரத்தன் டாடா | பகுதி 25

இந்தியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை, இந்தியாவின் முதல் நீராற்றல் மின்சாரம், இந்திய நிறுவனத்தின் முதல் இந்திய கார் என பல பெருமைகளைக் கொண்ட டாடா குழுமத்தில் கூட சில அதிர்ச்சிகரமான முறைகேடுகள் அந்நிறுவன அதிகாரிகளால் கடந்த கால வரலாற்றில் நடந்துள்ளன
Ratan Tata

Ratan Tata

Newssense

Published on

1963 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் கேன்டீன் துறையில் தன் 28 வயதில் டாடா குழுமத்தோடு பயணிக்கத் தொடங்கிய அஜித் பாபுராவ் கேர்கர், நாளடைவில் அந்த ஹோட்டலுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தாஜ் குழும ஹோட்டல்களை நிர்வகிக்கும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ஆனார்.

டாடா குழுமத்தின் ஹோட்டல் வியாபாரத்திற்கு தனி பரிமாணத்தை கொடுத்தார். டாடா குழுமத்தை, பல்வேறு ஹோட்டல்களைத் திறக்க வைத்தவர்களில் முதன்மையானவர் என்றும் அஜீத் கேர்கர் புகழப்படுகிறார்.

Ajit Kerkar

Ajit Kerkar

Twitter

அஜித் கேர்கரின் பங்கு

கோவா என்கிற மாநிலத்தை ஒரு சுற்றுலாத் தளமாக மேம்படுத்தியதில் அஜித் கேட்கருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு என பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர். கோவாவில் தாஜ் ஃபோர்ட் அகுடா ரிசார்டைக் கட்டியதில் அஜித் கேட்கருக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

டாடா குழுமத்தின் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்கள் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் என்கிற நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

1994 ஆம் ஆண்டு, அஜீத் கேர்கர் அந்நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். அவ்வாண்டு அஜீத் கேர்கர் 65 வயதை எட்டினார். அவர் வயதைக் காரணம் காட்டி, விதிமுறைகளின்படி ஓய்வு பெருமாறு கூறியது டாடா குழும இயக்குநர்கள் குழு.

அப்போது டாடா குழுமத் தலைவர்கள் 75 வயது வரை பதவியில் இருக்கலாம் என்றொரு விதியும் இருந்தது. அஜித் கேட்கரோ சேர்மேனாக இருந்ததைப் பயன்படுத்தி, அவர் பதவியிலிருந்து விலக மறுத்தார்.

Ajit Kerkar

Ajit Kerkar

Facebook

அஜித் கேர்கர் தவறு செய்தார்

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மற்றும் டாடா குழுமத்தின் சட்ட ஆலோசகர் நானி பால்கிவாலா, ஒரு கடிதத்தை வெளியிட்டனர். அதில் அஜித் கேர்கர் சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர்.

டாடா குடும்பத்திடம் தெரியப்படுத்தாமல் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் வெளிநாடுகளில் பல்வேறு துணை நிறுவனங்களை நிறுவியது, பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் டாடா குழுமத்திற்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்கப்படாமல் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது, இரு முக்கிய நகரங்களில் இருந்த தாஜ் ஹோட்டல்களை வெளிநாட்டு விமானசேவை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என பல்வேறு முறைகேடுகள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த பிரச்சனைகளால் டாடா குழுமத்திற்கு பணத்தளவில் பெருத்த நஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதுபோக பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட ஒரு சுற்றுலா முகமை நிறுவனத்தின் பங்குகளை 1971ஆம் ஆண்டில் தாஜ் ஹோட்டல்களின் பணத்தைப் பயன்படுத்தி வாங்கியது, லண்டனில் வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் அந்நிறுவனத்தின் தாய் நிறுவன பங்குகளை வாங்கியது என பல பிரச்சனைகள் கிளம்பின.

இத்தனை வியாபாரப் பணிகளைச் செய்த அஜித் கேர்கர், தன் பெயரில் ஒரு பங்கைக் கூட வாங்கவில்லை. எல்லா பங்குகளையும் தான் நிறுவிய நிறுவனங்கள் மூலம் வாங்கியதால், அஜித் கேர்கர் உறுதியாக தவறு செய்தார் என சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு நிறுவனங்களின் கட்டமைப்புகள் சிக்கலாக இருந்தன.

Nanabhoy Palkhivala

Nanabhoy Palkhivala

Facebook

சட்ட மேதையான நானி பால்கிவாலா

சட்ட மேதையான நானி பால்கிவாலா, அஜீத்தின் பணப்பரிவர்த்தனைகளில் ஃபெரா எனப்படும் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்ட விதி மீறல்களை கண்டுபிடித்தார்.

இப்படி தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்குள்ளேயே இத்தனை பிரச்சனைகளை வைத்துக்கொண்டு, ஒரு வங்கியை தொடங்க பல்வேறு பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார் அஜீத்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம் ஹச் கனியா, இந்திய அரசின் ஓய்வுபெற்ற வெளியுறவுத்துறைச் செயலர் ஜெ என் தீக்ஷித் ஓய்வு பெற்ற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வி எஸ் நடராஜன் ஆகியோரை வங்கி பணிக்காக தன்னோடு சேர்த்துக் கொண்டு பல பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தார் அஜீத் கேர்கர்.

1997 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற டாடா குழுமத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், மேற்கூறிய காரணங்களைச் சுட்டிக் காட்டி அஜித் கேர்கரை இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவன தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, ஹோட்டல் துறையில் டுளிப் ஸ்டார் ஹோட்டல் என்கிற பெயரில் செயல்பட்டு வந்தார் அஜீத்.

முந்தைய பகுதியைப் படிக்க

Ratan Tata

டாடா குழுமம் வரலாறு : கோஹினூர் வைரம் என்று பாராட்டிய முரசொலி மாறன் | பகுதி 24

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com