டாடா குழுமம் வரலாறு : தமிழ்நாட்டுக்கு தொப்புள் கொடி உறவாக இருந்த டைட்டன் | பகுதி 29

ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியம் மக்களால் போற்றப்பட வேண்டுமென்றால், அந்நிறுவனம் மக்களின் மனதைத் தொட்டிருக்க வேண்டும். அப்படி இன்று வரை மக்களின் மனதை டாடா தொட ஒரு வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கும் நிறுவனங்களில் டைட்டனுக்கு தனி இடம் உண்டு
Titan

Titan

Twitter

கண்ணாடி, கைக்கடிகாரம், பை, வாசனை திரவியம்... என எல்லாவற்றிலும் தனக்கென இளைஞர்கள் மத்தியிலும், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் தனி இடம் பிடித்திருக்கும் நிறுவனமது.

இதெல்லாம் போக, தமிழ்நாட்டுக்கும் டாடா குழுமத்துக்கும் இந்த நிறுவனத்தோடு ஒரு தொப்புள் கொடி உறவும் உண்டு.

டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி கிடக்கின்றன. அப்படி 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் TIDCO மற்றும் டாடா குழுமத்தால் இணைந்து தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டைட்டன். இந்நிறுவனத்தின் பதிவு அலுவலகம் இன்று வரை தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரத்தில்தான் இருக்கிறது.

இன்று டைட்டன் இந்தியாவின் முன்னணி லைஃப் ஸ்டைல் பிராண்டுகளில் ஒன்று. ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யும் பிரமாண்ட நிறுவனம்.

Watch Makers

Watch Makers

Facebook

மாணவர்கள் தங்கள் வீடுகளை விட்டு டைட்டன் ஆலைக்கு வந்து சேர்ந்தார்கள்

கடந்த டிசம்பர் 2021 நிலவரப்படி, இப்போதும் தமிழ்நாடு அரசின் TIDCO அமைப்பு ஒட்டுமொத்த டைட்டன் நிறுவனத்தில் சுமார் 27.8 சதவீத பங்குகளை வைத்துள்ளது. டைட்டன் நிறுவனம் கொடுக்கும் ஈவுத் தொகை இப்போதும் தமிழ்நாடு அரசுக்கு ஒரு வருமானமாகத் தொடர்கிறது.

தமிழ்நாட்டில் போதிய அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

ஆனால் டைட்டன் நிறுவனம் எதிர்பார்க்கும் தரத்தில் கடிகாரங்களை உற்பத்தி செய்யவோ, ஆலைகளில் பணியாற்றும் அளவுக்கு திறன் கொண்ட ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை.

எனவே டைட்டன் நிறுவனம் நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற சில மாவட்டங்களில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு கடிகாரங்களைச் செய்யும் தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கும் யோசனையை முன் வைத்தது.

அது தொடர்பாக பல்வேறு பள்ளி தாலாளர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளோடு பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. பள்ளி, மாணவர்கள், பெற்றோர் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்ட பிறகு, இளம் மாணவர்கள் தங்கள் வீடுகளை விட்டு டைட்டன் ஆலைக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்களுக்கென தனி உண்டு உறைவிட இல்லங்கள் உருவாக்கப்பட்டன.

Titan

Anikha Surendran : These Images would Stun You | Visual Story

Tanishq

Tanishq

Facebook

1994 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய நகை சந்தையில் 'தனிஷ்க்' என்கிற பெயரோடு களமிறங்கியது டைட்டன்

உலகத்தரத்தில் கை கடிகாரங்களை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்டன. கடிகாரங்கள் உலகத் தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்திய சந்தையைப் புறட்டிப்போட்டது டைட்டன். இன்று உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கைக்கடிகார தயாரிப்பாளராக உலகின் டாப் நிறுவனங்களோடு மோதி விளையாடிக் கொண்டிருக்கிறது டைட்டன்.

1994 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய நகை சந்தையில் 'தனிஷ்க்' என்கிற பெயரோடு களமிறங்கியது டைட்டன். நகையை வாங்கிய போது அது 21 கேரட்டோ, 22 கேரட்டோ என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அதே தரத்தில் நகையை வாங்கிக் கொள்ளும் வழக்கம் இன்று வரை தனிஷ்க்கில் பின்பற்றப்பட்டு வருகிறது.

2000 ஆண்டுக்கு பிறகு ஃபாஸ்டிராக் என்கிற இளைஞர்களுக்கான பிராண்டை அறிமுகப்படுத்தி இன்று வரை சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது டைட்டன். அதே போல கடந்த 20 ஆண்டுகளில் கேரட் லேன், Favre Leuba என பல பிராண்டுகளை கையகப்படுத்தியது.

ஃபாஸ்டிராக், சோனாட்டா, ஆக்டேன், சைலஸ், ஹீலியோஸ், டைட்டன் ராகா தனிஷ்க், கேரட் லேன், டைட்டன் ஐ பிளஸ், ஸ்கின் என பல பிராண்டுகளின் கீழ், டைட்டன் நிறுவனம் தங்கம், வைரம், கடிகாரம், கண்ணாடி, வாசனை திரவியம் என பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

Titan Edge

Titan Edge

Facebook

டைட்டன் எட்ஜ்

21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், 'டைட்டன் எட்ஜ்' என்கிற பெயரில் உலகின் மிக மெல்லிய கை கடிகாரத்தை உற்பத்தி செய்து, உலக கடிகார தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொடுத்ததும் டைட்டனின் பிரமாண்ட சாதனைகளில் ஒன்று.

டைட்டன் எட்ஜ் கடிகாரங்கள், இப்போதும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த கடிகாரத்தின் தடிமன் எவ்வளவு தெரியுமா... வெறும் 3.5 மில்லிமீட்டர். இந்த சாதனையும், டைட்டன் நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனர் ஷெர்செக்ஸ் தேசாய் காலத்தில் தான் அரங்கேற்றப்பட்டது.

டாடா குழுமம் வெறுமனே வியாபாரம் மட்டும் செய்யவில்லை, வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, தொழில் செய்யும் இடத்தில் உள்ள மக்களின் மனதை கவர்ந்திருக்கிறது என்பதற்குஒரு உதாரணத்தை ஹரீஷ் பட் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டைட்டன் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகள் படிப்பதற்கு என தனி பள்ளி ஒன்றை ஓசரில் நிறுவினார் ஷெர்செக்ஸ் தேசாய். அவரது கடைசி காலத்தில் கூட அப்பள்ளியோடு நெருக்கமாக இருந்தார்.

2016-ஆம் ஆண்டு தேசாய் காலமான பிறகு, அவருடைய உடல் ஒசூரில் தான் தகனம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி அஞ்சலியில் ஆயிரக்கணக்கான சாமானிய மக்கள் பங்கெடுத்து மரியாதை செய்ததாக ஹரிஷ் பட், தன் 'டாடா ஸ்டோரிஸ்' என்கிற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.டாடா வியாபாரத்தில் மட்டுமின்றி, எளிய மக்களின் இதயங்களையும் வென்றது என்பதற்கு இந்த நெகிழ்வுச் சம்பவமும் ஒரு சாட்சி.

முந்தைய பகுதியைப் படிக்க

Titan

TATA குழுமம் வரலாறு : தொலைத் தொடர்பு துறையில் தோல்வியடைந்த டாடா | பகுதி 28

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com