டாடா குழுமம் வரலாறு : யுனிலிவர் நிறுவனம் டாடா குழுமத்தைக் கண்டு அஞ்சியது ஏன் ? |பகுதி 9

யுனிலிவர் நிறுவனமே டாடா குழுமத்தைக் கண்டு பயந்தது ஏன்? விடை ஹமாம் மற்றும் 501
Hindustan Unilever Limited

Hindustan Unilever Limited

Twitter

Published on

கேரளாவில் டாடா ஆயில் மில்ஸ் தொடங்கப்பட்ட பின், கூட்டுறவு முறையில் தேங்காய் கொள்முதல்கள் நடந்தன. சிறு விவசாயிகள் நல்ல பலன் கண்டனர். ஆனால் தேங்காய் எண்ணெய் வியாபாரம் தலைதூக்கவில்லை.

Indian Coconuts

Indian Coconuts

Facebook

பிரச்சனையில் கவனம் செலுத்தாத தாம்சன்

பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்கா முதலீடு செய்திருந்ததால், அந்நாட்டிலிருந்தே தனக்கான எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டது. அது போக இந்திய தேங்காய்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி வேறு விதித்தது அமெரிக்கா.

மறு பக்கம் டாடா எண்ணெய் ஆலையில் ஆலோசகராக நியமிக்கப்பட்ட எட்வர்ட் தாம்சன், பிரச்சனையில் கவனம் செலுத்தாமல், சொகுசுக் கப்பல் வாங்கிவிட்டுக் கொண்டிருந்தார். அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வியாபாரத்தை நிலைநிறுத்தும் பணியில் இறங்கியது ஒட்டுமொத்த டாடா குழுமம்.

Soap

Soap

Twitter

சோப்பு உற்பத்தியில் இறங்கிய டாடா

சரி எண்ணெய் ஆலை தொடங்கிவிட்டோம், தயாரிக்கும் எண்ணெய்யை இந்தியாவிலேயே விற்றால் என்னவென... கோகோஜெம் (Cocogem) என்கிற பெயரில் விற்கத் தொடங்கினர். சந்தையில் சக்கைபோடு போட்டது. காரணம் அன்றைய காலத்தில் பலரும் எண்ணெய் உற்பத்தி செய்து விற்றாலும், அதன் தரம் மற்றும் விலை அடிக்கடி மாறி வந்தது. அவ்வெற்றிடத்தை பூர்த்தி செய்தது கோகோஜெம்.

வெறுமனே எண்ணெய் விற்பது கட்டுப்படி ஆகாததால், சோப்பு தயாரித்தால் என்ன? என அடுத்த பொருளை நோக்கிக் கிளம்பியது டாடா.

1879ல் தான் இந்தியாவில் முதல் குளியல் சோப்பு உற்பத்தி செய்யப்பட்டது, ஆனால் மக்கள் மத்தியில் பெரிதாக சென்று சேரவில்லை. 1895ஆம் ஆண்டு கல்கத்தா நகரத்தில் 'சன் லைட்' என்கிற பெயரில்

துணி சோப்புகள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த சோப்பு லீவர் சகோதரர்களால் உற்பத்தி செய்யப்பட்டது.

அந்த லீவர் தான் இன்று உலகின் பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் யுனிலிவர்.

501 soap

501 soap

Twitter

501 சோப்பின் விற்பனை

20ஆம் நூற்றாண்டில், இந்தியா போன்ற ஏழை நாடுகள் யோசிக்கத் தயங்கும் இரும்பு ஆலை, தனியார் மின்சார உற்பத்தி, கம்பீரமாக அரபிக் கடலடிவாரத்தில் காற்று வாங்கும் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் என டாடாவின் வியாபார சாதனைகள், லீவர் நிறுவனத்தை கொஞ்சம் நிலைகுலையச் செய்தது.

சோப்பு விற்கத் தீர்மானித்த டாடாவோ, தங்கள் சோப்பின் பெயர் பிரிட்டிஷாரோடு தொடர்பில்லாத படி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். அப்போது யுனிலிவர் நிறுவனத்துக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் '500' என்கிற பெயரில் சோப்பை வெளியிட்டு போட்டியாக இருந்தது. இருவருக்கும் போட்டியாளராக களமிறங்க விரும்பிய டாடா ஆயில் மில்ஸ் '501' என்கிற பெயரில் 100 சோப்புகளை 10 ரூபாய்க்கு விற்கத் தொடங்கியது.

யுனிலிவர் போட்டிக்கு தன் 100 சோப்புகளை 6 ரூபாய்க்கு விற்றது. அது அடக்கவிலையை விட குறைவான விலை என்றுணர்ந்த டாடா, யுனிலிவர் எத்தனை நாட்களுக்கு தாக்குபிடிக்குமென பார்க்கலாம் என கை கட்டி வேடிக்கை பார்த்தது. டாடா குழுமம் எதிர்பார்த்த படியே, சில மாதங்களில் மீண்டும் தன் பழைய விலைக்கு கொண்டுவந்தது யுனிலிவர்.

Hamam Soap

Hamam Soap

Facebook

'ஹமாம்' மற்றும் '501'

1931ஆம் ஆண்டுதான் இந்தியர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட 'ஹமாம்' குளியல் சோப்பை களமிறக்கியது டாடா ஆயில் மில்ஸ்.

இதில் கவனிக்க வேண்டிய நகை முரண் என்னவெனில், பின்னாளில் 'ஹமாம்' மற்றும் '501' என இரு பிராண்டுகளையும் டாடா குழுமத்திடமிருந்து விலைகொடுத்து வாங்கியதும் இதே யுனிலிவர்தான்.

டாடா இரும்பு ஆலை, டாடா ஆயில் மில்ஸ் என டாடாவின் வியாபாரம் சிறப்பாகச் சென்று கொண்டிருக்க மறுபக்கம், டாடா குழுமம் டாடா பிக்மெண்ட்ஸ், டாடா மெட்டல் அண்ட் ஸ்ட்ரிப்ஸ், டாடா டாவி, டாடா மன், டாடா அக்வடிக் ஃபார்ம்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் (தி இந்தியா சிமெண்ட்ஸ் அல்ல) என பல நிறுவனங்களை நிறுவி இருந்தது டாடா குழுமம். இந்தியாவின் தொழில் வளர்ச்சியை முன்னெடுக்கும் எல்லா துறைகளிலும், எல்லா நாடுகளிலும் கால் பதிக்க விரும்பியது டாடா.

https://twitter.com/tatacompanies/status/981150207751569408?lang=en

பறக்க துடித்துக் கொண்டிருந்த டாடா குழுமத்தின் தலையில் தடாலென அடித்தது டாடா இரும்பு ஆலைப் பிரச்சனைகள். மறுபக்கம் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்த தொராப்ஜி தன் சொந்த செலவிலும், வேறு சிலரின் உதவிகளோடும், 1920 பெல்ஜியம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க ஆறு பேர் கொண்ட இந்திய அணியை அனுப்பிவைத்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com