Elon Musk: இல்ல... இல்ல... மொத்த கோட்டையும் அழிங்க - Twitter விவகாரத்தில் மஸ்க் யூடேர்ன்

எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் போலியானவை அல்லது ஸ்பேம் கணக்குகளாக இருக்கலாம். இந்த எண்ணிக்கை 20 சதவீதத்தை விட அதிகமாகக் கூட இருக்கலாம் என தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மஸ்க்
மஸ்க்Twitter
Published on

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் டீலை முன்னெடுக்க முடியாது எனப் பதிவிட்டுள்ளது ஒட்டுமொத்த கார்ப்பரேட் மற்றும் இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஏப்ரல் இரண்டு மற்றும் மூன்றாவது வாரத்தில் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்குவதற்கான திட்டத்தை ட்விட்டர் இயக்குநர்கள் குழுவிடம் விளக்கினார்.

ட்விட்டர் தரப்பில் கொஞ்சம் கால தாமதமாக, அதை ஏற்றுக் கொள்வதாகச் செய்திகள் வெளியாயின. ட்விட்டரை எலான் மஸ்க் முழுமையாக வாங்கும் மற்ற நடைமுறைகள் எல்லாம் முறையாக மேற்கொள்ளப்பட்டு, விரைவில் எலான் மஸ்க் ட்விட்டரை வசமாக்கிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று (மே 17, செவ்வாய்கிழமை) எலான் மஸ்க் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ட்விட்டர் டீலை முன்னெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவைக் கீழே பார்க்கலாம்.

ட்விட்டர் தளத்தில், பாட்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகள் எல்லாம் சேர்த்து சுமார் 5% கணக்குகள் இருக்கலாம் என ஓர் அறிக்கையில் ட்விட்டர் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கோ, ட்விட்டர் தளத்தில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் போலியானவை அல்லது ஸ்பேம் கணக்குகளாக இருக்கலாம். இந்த எண்ணிக்கை 20 சதவீதத்தை விட அதிகமாகக் கூட இருக்கலாம் என தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி பராக் அகர்வால் கூட, ட்விட்டரில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே ஸ்பேம் மற்றும் போலிக் கணக்குகள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கொடுக்க மறுத்துவிட்டார் என்றும் அந்த ட்விட் பதிவில் குறிப்பிட்டுள்ளார் எலான் மஸ்க்.

இந்த செய்தியைக் கேட்ட பின், அமெரிக்க பங்குச் சந்தையில் ட்விட்டரின் விலை சுமார் 2.2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. எலான் மஸ்க் தன் அணியை வைத்து ட்விட்டரில் உள்ள போலிக் கணக்கு விவரங்களை விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மஸ்க்
Twitter நிறுவனத்தை வாங்க நினைத்த $44 பில்லியன் பணத்தில் என்னவெல்லாம் செய்திருக்கலாம்?

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்பத் துறை கையகப்படுத்தலில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் டீலும் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.

யார் கண் பட்டதோ, சனிப் பெயர்ச்சி பலனோ, குரு பெயர்ச்சி வக்கிரமோ தெரியவில்லை. ட்விட்டர் இயக்குநர்கள் குழு ட்விட்டர் தளத்தை நிம்மதியாக விற்று வெளியேற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

கூடிய விரைவில் எலான் மஸ்க் தரப்பிலிருந்தோ அல்லது ட்விட்டர் தரப்பிலிருந்தோ இதற்கு ஒரு தீர்வு காணப்பட்டு, டீல் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஸ்க்
எலான் மஸ்க் முதல் அதானி வரை : இவர்களது முதல் பணி என்ன தெரியுமா? - ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com