கபே காபி டே இந்தியாவின் மிகப்பெரிய காபி நிறுவனமாகத் திகழ்ந்தது, பெரு நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்குக் காபி டே தான் சாட்டிங் ஸ்பாட். 2000களில் வெளியான சினிமாக்களில் கூட காபி டே நிறுவனத்தைப் பற்றிய பதிவுகள் இருக்கும். ஆசியாவின் மிகப்பெரிய காபி தோட்டத்துக்குச் சொந்தக்காரரான அதன் உரிமையாளர் சித்தார்த்தாவின் மறைவு அனைத்தையும் புரட்டிப்போட்டது. வீழ்ந்து அழியும் நிலையும் நிலையிலிருந்த அந்த நிறுவனத்தை தனியொரு பெண்ணாகத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா.
சிங்கப்பூரில் ஒரு மதுபானிக்கிடையில் இணைய வசதியுடன் மதுபானம் விற்கப்பட்டது. அந்த கடையில் மட்டும் எங்குமில்லாத கூட்டம் கூடுவதைக் கவனித்த சித்தார்த்தாக்கு இளைஞர்களைக் கவரும் ஒரு காபி கடையின் ஐடியா தோன்றியது. அதுதான் கபே காபி டே.
1996 -ம் தேதி முதல் காபி டே தொடங்கப்பட்டது. கவர்ச்சிகரமான காபி பார் கல்லூரி மாணவர்களை ஈர்த்தது. இளையராஜா-விலிருந்து ரகுமானுக்கு மாறியிருந்தவர்கள் காபி டே-க்கும் மாறினர். வெற்றிகரமான நிறுவனமாகத் திகழ்ந்தது காபி டே. 2015-ம் ஆண்டு Forbes நிறுவனத்தின் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய அளவில் 75வது இடத்தை பிடித்தார் சித்தார்த்தா. வெளியிலிருந்து பார்க்கும் போது இந்தியாவின் முதல் செயின் காபி நிறுவனத்தை நிறுவியவர், முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணனின் மருமகன் என சித்தார்த்தாவின் வாழ்க்கை பலருக்கும் ஆசை வாழ்க்கையாக இருந்தது. எல்லாம் 2017-ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை வரைதான் நிலைத்தது.
சித்தார்த்தாவுக்கு சொந்தமான 20 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் அவர் பெருமளவு வரியேய்ப்பு செய்துள்ளதும், அவருக்குப் பெருமளவு கடன் இருப்பதும் தெரியவந்தது. கபே காபி டே மற்றும் வே டூ வெல்த் என இரு நிறுவனங்களை நடத்தி வந்தார் சித்தார்த்தா.
2019-ம் ஆண்டு வரை அவர் தொழிலில் எந்த மாயாஜாலமும் அவருடைய பங்குச் சந்தை சொத்துக்களைப் பெருவாரியாக தன்னுடன் இணைத்துக்கொண்டது வருமான வரித் துறை. 3000 கோடி மதிப்புக் கொண்ட பங்குகள் வரை விற்றார் ஆனாலும் ஒரு பைசா கூட கையில் நிற்கவில்லை. தொடர் தோல்விகள் துரத்த 2019-ம் ஆண்டு மங்களூரில் ஆற்றில் குதித்து தன் காலத்தை நிறுத்திக்கொண்டார் சித்தார்த்தா. தனது தற்கொலை கடிதத்தில் "கடின உழைப்பை கொடுத்த போதிலும், லாபகரமான வணிக மாதிரியை உருவாக்க தவரிவிட்டேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு முதலமைச்சரின் மகளாக வளர்ந்த சித்தார்த்தாவின் மனைவி மாளவிகாவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் காபி டே நிறுவனமும் இடிந்தே விட்டன. செய்வதறியாத கையறு நிலை தான் தொடர்ந்தது. சித்தார்தாவின் சொத்து மதிப்பு அவர் கடனை விட அதிகமாக இருந்ததால் அவரின் மரணமும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்தது. இரண்டு மகன்களுக்கு தாயாக இருக்கும் மாளவிகா, 2020-ம் ஆண்டி டிசம்பரில் கபே காபி டே-வின் சிஇஓ-வாக பதவியேற்றார்.
2019-ல் சித்தார்த்தா மறைந்த போது காபி டே நிறுவனத்துக்கு 7000 கோடி கடன் இருந்தது. கணவனை இழந்து முதன்முதலாக ஒரு நிறுவனத்தைத் தலைமை தாங்கும் பெண்ணிற்கு இது மிகப்பெரிய சவால் தான்.
கபே காபி டே-வை காப்பாற்றக் களத்தில் இறங்கினார். கடந்த ஆண்டுகளில் அவரிடம் தீராத உழைப்பைத் தவிர வேறொன்றையும் பார்த்திருக்க முடியாது. சமீபத்தில் ஒரு பேட்டியில் “நிறுவனத்தின் கடினமான காலகட்டத்தில் ஊழியர்கள் துணை நின்றனர்” எனக் கூறினார். இது தான் சித்தார்த்தா விட்டு சென்ற நம்பிக்கை. கபே காபி டே எப்போதுமே மகிழ்ச்சியின் அடையாளமாக இருந்தது அதனைக் காத்து வந்தார் மாளவிகா. அவரின் புதிய முடிவுகள் ஊழியர்களுக்கு நம்பிக்கை அளித்தது. தேவையற்ற செலவுகளை குறைத்துவிட்டு வியாபாரத்தைப் பெருக்கினார். காலத்துக்கு ஏற்றது போல் மறுவடிவம் கொடுத்தார். கொரோனா காலத்தையும் சீராக கையாண்டு நிறுவனத்தை நிலை நிறுத்தினார். "ஒரு லாபகரமான வணிக மாதிரியை வெளிக்கொண்டு வந்தார்".
7000 கோடி கடனை பதவியேற்ற சில நாட்களில் 3100 கோடியாக குறைத்த மாளவிகா கொடுத்திருக்கிற ரிசல்ட் மிக மிக ஆச்சர்யமானது இப்போது அவரது கடன் சுமை 1731 கோடி ரூபாய் மட்டுமே.தனது கணவரின் கனவுகளை நனவாக்க, அவரது திறமையை உலகுக்கு எடுத்துரைக்க கடனில்லாத உலகம் முழுவதும் இன்னும் விரிவுபடுத்தப்பட்ட நிறுவனமாகவும் கபே காபி டே-வை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறார் மாளவிகா.