18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?

எப்போதும் உடனிருக்கும் பணியாளர்கள், மதிப்புமிக்க பதவி, திரும்பும் திசையெல்லாம் கிடைக்கும் மரியாதை, அரசு வருமானம், அரசு மாளிகை அனைத்தையும் விட்டுவிட்டு தனியாக தொழில் தொடங்க முனைந்தார் சைனி.
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?Twitter

Unacademy தற்போது இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய கல்வி தொழில்நுட்ப (Ed-Tech) நிறுவனமாகும். கடந்த 5-6 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.

இஞ்சினியராக இருந்து தொழிலதிபராக மாறிய கௌரவ் முஞ்சால் என்பவரின் யூடியூப் சேனல்தான் அன்னகேடமி உருவாக அடித்தளமாக இருந்தது.

ஆனால் அன்னகேடமி என்ற சாம்ராஜியத்தைக் கட்டி எழுப்பிய பெருமை ரோமன் சைனி என்ற இளைஞரையே சென்றடையும்.

இப்போது 26000 கோடி மதிப்புடைய இந்த நிறுவனத்தை கட்டி எழுப்பியிருக்கும் இவர் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ரோமன் சைனி? ஐஏஎஸ் அதிகாரி வேலையை விட்டுவிட்டு தொழிலில் இறங்கியது ஏன்?

இந்தியாவில் உள்ள மிகவும் கூர்மையான அறிவுடைய நபர்கள் என ஒரு பட்டியலைத் தயார் செய்தால் அதில் நிச்சயமாக ரோமன் சைனிக்கு இடமிருக்கும்.

ரோமன் சைனிக்கு 18வயது இருக்கும் போது மிகவும் கடினமான எய்ம்ஸ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவரானார்.

தனது 22 வயதில் யூபிஎஸ்சி தேர்வில் தகுதி பேற்று ஐஏஎஸ் அதிகாரியானார். மத்திய பிரதேச மாநிலத்தில் மதிப்புமிக்க மாவட்ட ஆட்சித்தலைவராக செயல்பட்டார்.

எப்போதும் உடனிருக்கும் பணியாளர்கள், மதிப்புமிக்க பதவி, திரும்பும் திசையெல்லாம் கிடைக்கும் மரியாதை, அரசு வருமானம், அரசு மாளிகை அனைத்தையும் விட்டுவிட்டு தனியாக தொழில் தொடங்க முனைந்தார் சைனி.

18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?
தேர்வில் முதலிடம்! இணையத்தை கலக்கும் 108 வயது தமிழக மூதாட்டி - யார் இந்த கமலகண்ணி?

2014ம் ஆண்டு ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு கௌரவ் முஞ்சால் மற்றும் ஹெமேஷ் சிங் ஆகியோருடன் இணைந்து அன்னகேடமியின் தாய் நிறுவனமான ஹாட் டெக்னாலஜீஸைத் தொடங்கினார்.

இப்போது அன்னகேடமி மூலம் பலர் யுபிஎஸ்சி-யில் வெற்றி பெற வழிகாட்டி வருகிறார் ரோமன் சைனி. அன்னகேடமி இருப்பதனால் யுபிஎஸ்சி படிப்பவர்களும் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்காமல் இருக்கலாம்.

18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?
சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?

அன்னகேடமியின் சிஇஓ-வாக இருக்கும் கௌரவ் முஞ்சால் 2022ம் ஆண்டு 1.58 கோடி சம்பாதித்துள்ளார். ஹேமேஷ் சிங் 1.19 கோடியும் ரோமன் சைனி 88 லட்சமும் சம்பாதித்துள்ளனர்.

ஒரு மருத்துவராகவும், ஐஏஎஸ் அதிகாரியாகவும் இருந்த போதும் நல்ல பொறுப்பில் இருப்பதை விட தனது கனவைத் தேடுவதே முக்கியம் என நினைத்த ரோமன் இப்போது வெற்றிகரமான தொழில்முனைவோர் என்ற இடத்துக்கு வந்துள்ளார்!

18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?
பாலியல் தொழில் செய்து பிழைக்கும் மாணவிகள் : அவலச் செய்தி - என்ன, எங்கே நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com