150 பேரை பணிநீக்கம் செய்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் - காரணம் என்ன?

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் குறைந்து வருவதால், செலவினைக் குறைக்கும் பொருட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் தான் தொடங்கப்பட்ட அதன் பொழுதுபோக்கு தளமான Tudum இல் பணிபுரியும் பல அனுபவமிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை பணிநீக்கம் செய்தது.
Netflix
Netflixtwitter
Published on

பிரபல ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் சமீபத்தில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தனது சந்தா கட்டணத்தை உயர்த்தியது. இதனால் பல லட்சம் வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் இழந்தது.

குறிப்பாக நெட்பிளிக்ஸ் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதிகப்பட்சமாக கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்தது. இது வரும் காலத்தில் 20 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Netflix
NetflixTwitter

இதனைத் தொடர்ந்து சந்தாதார்களை இழந்து வந்ததால் கட்டணத்தைக் குறைக்கும் விதமாக இந்த ஆண்டுக்குள் தங்களது வீடியோ சேவையில் விளம்பரத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சுமார் 150 பணியாளர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் குறைந்து வருவதால், செலவினைக் குறைக்கும் பொருட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் தான் தொடங்கப்பட்ட அதன் பொழுதுபோக்கு தளமான Tudum இல் பணிபுரியும் பல அனுபவமிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கடந்த மாதம் பணிநீக்கம் செய்தது.

மேலும் தனது ஊழியர்களிடம் நிறுவனத்தின் கொள்கைகளின் உடன்பாடு இல்லை என்றால் வெளியேறலாம் எனவும் கூறியுள்ளது.

Netflix
NetFlix : 6 மாதம், காணாமல் போன 15,60,000 கோடி ரூபாய் - என்ன ஆச்சு நெட்ஃப்ளிக்ஸுக்கு?

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com