போலி 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம் 100% அதிகரிப்பு - கண்டுபிடிப்பது எப்படி?
கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2021 - 22 நிதி ஆண்டில் போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, போலி 500 ரூபாய் நோட்டுக்கள் அதிகமாகப் புழக்கத்தில் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2021 - 22 நிதி ஆண்டில், அதற்கு முந்தைய நிதியாண்டை விட 101.9% கூடுதலாகப் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்ததாக ஆர்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் 2,000 ரூபாய் நோட்டுக்களில் 54.16% கூடுதலாகப் போலி நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு சுவாரசிய விஷயம் என்னவென்றால், ஒட்டுமொத்தமாகவே 2,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாகக் குறைந்து வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2020 காலத்தில் 274 கோடி 2,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இது புழக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுக்களில் 2.4%. மார்ச் 2021 காலகட்டத்தில் 2,000 ரூபாய் நோட்டுக்கள் எண்ணிக்கை 245 கோடியாக சரிந்தது. ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இது 2% மட்டுமே.
கடந்த மார்ச் 2022 காலத்தில் இது 214 கோடி நோட்டுக்களாகவும், ஒட்டுமொத்தமாகப் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில் 1.6 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
2,000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு மாறாக, 500 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் சகட்டுமேனிக்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 2021-ல் 3,867.90 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆனால் மார்ச் 2022 -ல் இந்த எண்ணிக்கை 4,554.68 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமாக 34.9% ரூபாய் நோட்டுக்கள் 500 ரூபாய் நோட்டுக்கள்தான். அதனைத் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தப்படும் நோட்டுக்கள் 10 ரூபாய் நோட்டுக்கள்தான். 10 ரூபாய் நோட்டுக்கள் இந்தியப் பொருளாதாரத்தில் 21.3 சதவீதமாக இருக்கிறது.
கடந்த மார்ச் 2021 காலத்தில் 500 ரூபாய் நோட்டுக்கள் இந்திய பொருளாதாரத்தில் 31.1 சதவீதமாக இருந்தது. மார்ச் 2020 காலத்தில் 25.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
போலி 500 ரூபாய் நோட்டுக்களிலிருந்து தப்பிப்பது எப்படி
500 ரூபாய் நோட்டை ஒளிவிளக்கில் வைத்துப் பார்த்தால் சில இடங்களில் பிரத்தியேகமாக 500 என எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
500 என தேவநாகரி மொழியில் எழுதப்பட்டிருக்கும்.
மகாத்மா காந்தியின் படம் வலது பக்கம் பார்ப்பது போலவும், கொஞ்சம் வலது பக்கம் நகர்வது போலவும் இருக்கும்.
500 ரூபாய் தாளை மேலும் கீழுமாக அசைத்தால், நோட்டின் மத்தியில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு இழையின் நிறம் பச்சையில் இருந்து இண்டிகோ நிறத்துக்கு மாறும்.
500 ரூபாய் நோட்டில் வலது பக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் வாக்குறுதி, ஆர்பிஐ இலச்சிணை, அவரது கையெழுத்து இருக்கும்.
500 ரூபாய் தாளை வெளிச்சத்தில் பார்த்தால், வலது பக்கம் மகாத்மா காந்தியின் வாட்டர்மர்க் படம் இடது பாக்கம் பார்ப்பது போலத் தெரியும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust