இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் தொழிலதிபராக திகழ்கிறார் ரத்தன் டாடா.
டாடா குழுமம் நூற்றாண்டு கடந்த வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அதன் நவீனமயமாதலில் முக்கியப் பங்காற்றுகிறார் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவின் தொலைநோக்கு பார்வைக் கொண்ட திட்டங்களும் அதிரடியான நடவடிக்கைகளும் வளர்ந்து வரும் தொழிலதிபர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பவையாக இருக்கும்.
இதனாலேயே ரத்தன் டாடா சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக உள்ளார்.
கடந்த ஞாயிறு டாடா மிகவும் முக்கியமான ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அது இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு காரான இண்டிகா வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் பகிரப்பட்டது.
"25 ஆண்டுகளுக்கு முன், டாடா இண்டிகா காரின் வெளியீடு இந்தியாவின் கார் தயாரிப்பு துறையின் பிறப்பு. இது பல நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்தது. என் இதயத்தில் இதற்கு சிறப்பான இடம் உண்டு" என டாடா தனது பதிவில் கூறியுள்ளார்.
இண்டிகாவின் வெளியீடு பல சிறிய கார்கள் இந்தியாவில் உருவாக காரணமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
டாடாவின் பதிவு லட்சக்கணக்கான லைக்குகளை குவித்தது.
அடிக்கடி நாஸ்டாலஜி பதிவுகளை இட்டு மக்களை கண்கலங்க செய்வார் டாடா. அந்த வகையில் இந்த பதிவுக்கும் சமூக வலைத்தள பயனர்கள் நெஞ்சார்ந்த பல கமன்ட்களை இட்டுள்ளனர்.
பலரும் முதல் தலைமுறை இண்டிகா கார் வாங்கியதைக் குறித்து பெருமைபட்டுக்கொண்டனர்.
"இந்தியாவைப் பொறுத்தவரையில் டாடா வெறும் நிறுவனம் அல்ல; அது ஒரு உணர்வு" என ஒருவர் கமன்ட் செய்திருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust