நானோ கார் உருவாக்கப்பட்டது ஏன்? - உண்மையை உடைத்த ரத்தன் டாடா

பல இந்திய நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு செண்டிமெண்டாக நானோ கார் நெருக்கமானதாக இருந்தது. பெரும்பாலானோரின் முதல் கார் நானோவாக இருந்ததே அதன் காரணம். ஆனால் அது திடீரென சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
ரத்தன் டாடா
ரத்தன் டாடாTwitter

2008 ஆம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நானோவை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் கார் வாங்கும் கனவை சாத்தியமாக்கியது. 'மலிவு விலை' கார்களில் ஒன்றாகக் கூறப்படும் நானோ, 1 லட்ச ரூபாய் மதிப்பில் சந்தையில் பரபரப்பைக் கிளப்பியது.

பல இந்திய நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு செண்டிமெண்டாக நானோ கார் நெருக்கமானதாக இருந்தது. பெரும்பாலானோரின் முதல் கார் நானோவாக இருந்ததே அதன் காரணம். ஆனால் அது திடீரென சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

ரத்தன் டாடா
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?
Nano
NanoTwitter

ரத்தன் டாடா நானோவை அறிமுகம் செய்யத் தூண்டிய 'உண்மையான காரணத்தை' இப்போது பகிர்ந்துள்ளார். நானோ எப்படி நிஜம் ஆனது? என்கிற முழு கதையையும் உணர்வு பொங்கக்கூறியிருக்கிறார். இந்தியக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பானதொரு சாலைப் பயணத்தைக் குறைந்த மதிப்பில் வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு நானோ உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் தம்பதிகளுக்கு இடையே சாண்ட்விச் போலக் குழந்தையை இடையில் வைத்து எடுத்துப் போகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் வழுக்கும் சாலைகளில் தான் பயணிக்கிறார்கள். எனவே தான் கதவில்லாத, கண்ணாடி இல்லாத மேற்கூரை மட்டுமே கொண்ட இரு சக்கர வாகனத்தைத் தயாரிக்க முதலில் திட்டமிட்டு வேலை செய்தோம். பிறகு அது நனோ காராக மாறிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

இந்த பதிவிட்ட நொடியிலிருந்து நெட்டிசன்கள் அவர் கமெண்ட் செக்சனில் குவிந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

ரத்தன் டாடா
பணத்திற்கு பதிலாக தங்கத்தை சம்பளமாக வழங்கும் ஓர் 'அடடே' நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com