இந்தியாவின் 5 நகரங்களில் தனது சூப்பர் டெய்லி சேவையை ஸ்விக்கி நிறுவனம் நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி, துரித டெலிவரி சேவைக்கான வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரியளவில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் முதலீடு, ஐபிஓ, டாலர் மதிப்புச் சரிவு, ESOP இழப்பு, ஊழியர்கள் வெளியேற்றம், டெலிவரி ஊழியர்கள் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைகளை இத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இன்ஸ்டா மார்ட் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அதிவிரைவாக டெலிவரி செய்யப்படும் சேவை நிறுவனத்தை புனித் குமார், ஸ்ரேயாஸ் நாகதாவானே இருவரும் சேர்ந்து தொடங்கினர். இந்நிறுவனத்தை சூப்பர் டெய்லி என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு ஸ்விக்கி நிறுவனம் வாங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளில் சூப்பர் டெய்லி சேவையின் எண்ணிக்கை 6 நகரங்களில் 2 லட்சமாக அதிகரித்தது.
ஆனால் எதிர்பார்த்தபடி சூப்பர் டெய்லி நிறுவனம் லாபம் ஈட்டவில்லை. இதனால் டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய 5 நகரங்களில் சூப்பர் டெய்லி சேவையை ஸ்விக்கி நிறுவனம் இன்று நிறுத்தியுள்ளது.
ஆனால் பெங்களூரு நகரில் தொடர்ந்து சேவை தொடரும் என்றும், வாடிக்கையாளர்களின் சந்தா தொகை மீதமிருந்தாலோ, அல்லது செலுத்தியிருந்தாலோ அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் எனவும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp