Hand Shake-ல் இருக்கும் உளவியல்; உங்களுக்கு கைக்கொடுக்க தெரியுமா?

நீங்கள் யாருக்காவது கைக்கொடுக்கும் போது அந்த கைக்குலுக்கலின் அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Hand Shake-ல் இருக்கும் உளவியல்; உங்களுக்கு கைக்கொடுக்க தெரியுமா?
Hand Shake-ல் இருக்கும் உளவியல்; உங்களுக்கு கைக்கொடுக்க தெரியுமா?Twitter
Published on

மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போது கைகளைக் குலுக்கிக்கொள்வது நாகரீகமான பழக்கமாக பார்க்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ள அன்பையும் மரியாதையையும் பகிர்ந்துகொள்ள கைக்குலுக்குகிறார்கள்.

ஆனால் இப்படி கைகளை கொடுக்கும் போது நீங்கள் எதற்காக கைக்கொடுக்கிறீர்கள், அடுத்ததாக என்ன கேட்கப் போகிறீர்கள் என உளவியல் ரீதியிலான விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.

நீங்கள் யாருக்காவது கைக்கொடுக்கும் போது அந்த கைக்குலுக்கலின் அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Sweaty palms (வியர்த்த உள்ளங்கை)

தொழில் முறையில் யாரையாவது சந்தித்தால் இந்த மாதிரியான கைக்குலுக்களை கையிலெடுக்கவேக் கூடாது என்கிறார்கள். நாம் பதட்டமாக இருக்கும் போது நம் கை வியர்த்திருக்கும் அல்லது குளிர்ந்திருக்கும்.

அப்படி கைக் கொடுப்பது எதிரிலிருக்கும் நபருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பதட்டமாக இருக்கும் ஒருவருடன் பிசினஸ் டீல் செய்துகொள்ள யார் விரும்புவார்?

நேர்காணல்களிலும் இந்த பதட்டம் இருக்கும். உங்கள் கைகள் வியர்க்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

செத்த மீன்

ஒருவர் கைக்கொடுக்கும் போது அதில் உற்சாகம் இருக்க வேண்டும், எதிரில் இருப்பவரை அரவணைக்கவோ அல்லது வரவேற்கவோ ஒரு கைக்குலுக்கலால் முடியும்.

ஆனால் மென்மையாக கைக் கொடுத்து எந்த அசைவும், அழுத்தமும் இல்லாமல் பிடித்து விடுவது செத்த மீன் கைக்கொடுத்தல் எனப்படுகிறது.

இப்படி மென்மையாக கைக்கொடுப்பவர்கள் குறைந்த சுயமரியாதை உள்ளவர்களாக, தன்னம்பிக்கையற்றவர்களாக காணப்படுகின்றனர்.

Brush off

இந்த வகையில் கைக்கொடுக்கும் போது ஒருவரின் கை சில நொடிகள் கூட உங்களிடம் இருக்காது லேசாக தொட்டுப் போவது போல கைக்கொடுப்பது "உங்களை விட முக்கியமான பலரை சந்திக்க வேண்டியிருக்கிறது" என்பதை உணர்த்தும். அதாவது உங்களை விட அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் எனத் தெரிவிக்கிறார்.

Hand Shake-ல் இருக்கும் உளவியல்; உங்களுக்கு கைக்கொடுக்க தெரியுமா?
தமிழ்நாட்டில் புதிய காட்டை உருவாக்கிய இஸ்ரேல் தம்பதி - ஓர் சுவாரஸ்ய கதை!

இரு கைக் கைக்குலுக்கல் - Hand Hug

ஒருவர் இரண்டு கைகளையும் பிடித்து குலுக்குவதைப் பொதுவாக அரசியல்வாதிகள் மத்தியில் பார்க்க முடியும். அரவணைப்பு, நட்பு, நேர்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை இதன் மூலம் கடத்த முடியும்.

ஆனால் அவரது கைகள் உங்கள் கைகளுக்கு உள் இல்லாமல் மணிக்கட்டையோ முலங்கையையோ பிடித்தால் அவர் உங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம்.

சுறுசுறுப்பான கைக்குலுக்கல்

ஒருவர் அதீத எனர்ஜியுடன் உங்கள் கைகளை குலுக்கி எரிச்சலடைய வைப்பார். எல்லாரும் இப்படி ஒருவரை கடந்து வந்திருப்போம். உண்மையில் இவர் பலத்தையும் தன்னம்பிக்கையும் பரிசோதிக்கிறார்.

எப்படி எல்லாம் கைக்கொடுக்க கூடாது, கைக்கொடுக்கும்போது உங்களிடம் எதிரிருப்பவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்பதை இவற்றிலிருந்து அறிந்துகொள்ள முடியும். நீங்கள் எப்போதும் உறுதியாகவும் தன்னம்பிக்கையுடனும் கைக்கொடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்!

Hand Shake-ல் இருக்கும் உளவியல்; உங்களுக்கு கைக்கொடுக்க தெரியுமா?
Myths : நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் 10 கட்டுக்கதைகள் - Interesting Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com