சிப்ஸ், பிஸ்கெட் ஏன் சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது?

பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மக்கள், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்கிறார்கள். சந்தையிலும் அதன் விற்பனை வீதம் அதிகமாகியுள்ளது.
சிப்ஸ், பிஸ்கெட் ஏன் சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது?
சிப்ஸ், பிஸ்கெட் ஏன் சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது?Canva

பயணங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போதும் நொறுக்கு தீனிகளை சாப்பிடுவோம். முறுக்கு, சீடை என இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை காட்டிலும் சிப்ஸ், குளிர்பானம் மீது அதிக நாட்டம் செலுத்துகிறோம்.

காய்கறி, சாதம் அல்லது சப்பாத்தி போன்றவை சாப்பிடும்வேளையில் போதும் என்று தோன்றும் ஆனால் சிப்ஸ், பிஸ்கெட் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் போதும் நமக்கு அவ்வாறு தோன்றுவதில்லை. ஏன் என்று எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?

பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மக்கள், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்கிறார்கள். சந்தையிலும் அதன் விற்பனை வீதம் அதிகமாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுக்கான சந்தை கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாக்கெட்டில் வரும் சிப்ஸ், சாக்லேட், பிஸ்கெட், ரொட்டி, பன் போன்றவை அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளாக கருதப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவு என்பது நீண்ட காலம் அதனை பயன்படுத்த பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் உணவை கெட்டுப் போகாமல் இருக்க பாதுகாப்பதே ஆகும்.

மற்ற உணவுகளை உண்ணும் போது, நமது மூளைக்கு வயிறு நிரம்பிவிட்டது என தோன்றும், ஆனால் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீங்கள் விரும்பி சாப்பிடும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

அதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பிவிட்டது என்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் மூளையில் இருந்து வராது, நீங்கள் அவற்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்க நினைப்பீர்கள்.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமனை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்றன. மேலும் செயற்கை பதப்படுத்திகளை கொண்ட உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலில் புற்றுநோய் உருவாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிப்ஸ், பிஸ்கெட் ஏன் சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது?
சோம்பலாக உணருகிறீர்களா? உங்கள் எனர்ஜியை அதிகரிக்க உதவும் 6 உணவுகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com