சீக்கியர்காளுக்கான ஹெல்மெட் : இணையவாசிகள் மனதை வென்ற பெண்ணின் தயாரிப்பு

கனடாவைச் சேர்ந்த டீனா சிங் என்ற பெண் தனது குழந்தைகள் சைக்கிலிங் செய்யும் போது தலையில் அடிபடாமல் இருக்க ஹெல்மெட் அணிவிக்க முயன்றுள்ளார். ஆனால் குழந்தைகளின் தலையில் இருக்கும் கொண்டையால் அது சரியாக பொருந்தவில்லை. இதற்காக பிரத்யேக சீக்கிய ஹெல்மெட் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
சீக்கியர்காளுக்கான ஹெல்மெட் : இணையவாசிகள் மனதை வென்ற பெண்ணின் தயாரிப்பு
சீக்கியர்காளுக்கான ஹெல்மெட் : இணையவாசிகள் மனதை வென்ற பெண்ணின் தயாரிப்புTwitter
Published on

சீக்கியர்கள் தலையில் டர்பன் அணியும் வழக்கமுடையவர்கள். அவர்களது நீளமான தலைமுடியை அள்ளி முடிந்து அதன் மேல் டர்பன் போட்டுக்கொள்வது அவர்களது வழக்கம்.

இந்த டர்பனும் நீளமான கூந்தலும் சில நேரங்களில் சிக்கலாக இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

குறிப்பாக ஹெல்மட் அணிவதற்கு இவை இடையூராக இருக்கும். இதற்கு புத்திசாலித்தனமான தீர்வை கண்டுபிடித்துள்ளார் ஒரு பெண்.

கனடாவைச் சேர்ந்த டீனா சிங் என்ற பெண் தனது குழந்தைகள் சைக்கிலிங் செய்யும் போது தலையில் அடிபடாமல் இருக்க ஹெல்மெட் அணிவிக்க முயன்றுள்ளார்.

சீக்கியர்காளுக்கான ஹெல்மெட் : இணையவாசிகள் மனதை வென்ற பெண்ணின் தயாரிப்பு
Air India: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி; அலட்சியம் காட்டிய விமான ஊழியர்கள்

ஆனால் குழந்தைகளின் தலையில் இருக்கும் கொண்டையால் அது சரியாக பொருந்துவதில்லை. இதற்காக பிரத்யேக சீக்கிய ஹெல்மெட் ஒன்றை வடிவமைத்துள்ளார் டீனா சிங்.

இந்த ஐடியா வெற்றிகரமானதாக இருக்கவே இதனைத் தொழிலாகத் தொடங்கியுள்ளார்.

பழைய ஹெல்மெட்கள் சீக்கிய குழந்தைகளுக்கு வலியையும் அசௌகரியத்தையும் தருவதாக டீனா தனது விளம்பரத்தில் தெரிவித்திருக்கிறார்.

சீக்கியர்காளுக்கான ஹெல்மெட் : இணையவாசிகள் மனதை வென்ற பெண்ணின் தயாரிப்பு
Battle of Saragarhi: 10,000 படைவீரர்களை எதிர்த்து போராடிய 21 சீக்கியர்கள்- வியத்தகு வரலாறு

இந்த சீக்கிய ஹெல்மெட்டை வடிவமைக்க டீனாவுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்பட்டதாகவும் இறுதியாக தற்போது விற்பனைக்கு ஏற்ற வடிவமைப்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டர்பன் அணிவதால் தலையில் எந்த பாதுகாப்பு கவசமும் அணியாமல் பிள்ளைகளுக்கு வாகனங்களை ஓட்ட சொல்லிக்கொடுக்கும் சீக்கிய குடும்பங்கள் இனி இந்த ஹெல்மெட்டை பயன்படுத்துவார்கள் என நம்புவதாக டீனா கூறியுள்ளார்.

சீக்கியர்காளுக்கான ஹெல்மெட் : இணையவாசிகள் மனதை வென்ற பெண்ணின் தயாரிப்பு
கனிகா : 32 வயதில் 10 பிரைவேட் ஜெட்களை சொந்தமாக்கிய இந்திய பெண் - ஊர் குருவி பருந்தான கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com