HBD எஸ். பி. பாலசுப்பிரமணியம் : பாடும் நிலாவின் சிறந்த 10 பாடல்கள்

"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியது வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை அவர் மறைவுக்குப் பின் உணர்கிறோம். அவரது பிறந்த நாளில் அவரின் நினைவுகளை கிளரும் சில பாடல்கள் இதோ...

ஆறு தேசிய விருதுகள், 45,000 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் என்ற கின்னஸ் சாதனை உட்பட, பல முறியடிக்கவே முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரர் எஸ்பிபி. தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் பாடி இந்தியா முழுவதும் புகழ் பெற்றவர். அவரது மறைவுக்கு பிறகான இந்த நாட்களிலும் தனது பாடல்களின் வழிப் புத்துணர்வை அளிக்கக்கூடியவராக இருக்கிறார் பாடும் நிலா பாலு.

logo
Newssense
newssense.vikatan.com