பொன்னியின் செல்வன் என்ற தமிழ் சினிமாவின் மைல் கல் திரைப்படத்தைப் இயக்குவதற்கான வாய்ப்பு மணிரத்னத்திற்கு கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் காட்ஃபாதர் இயக்குநர் என்றே நாம் மணிரத்னத்தைக் கூறலாம். அவரது படங்கள் பல திரைத்துறைக்கு பெருமை சேர்த்திருக்கிறது. இந்திய அளவில் அதிகம் அறியப்படும் இயக்குநராகவும் மணிரத்னம் இருக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் மணிரத்னத்தின் படங்கள் சினிமாவுக்குள் வர காரணமாக இருந்ததாக கூறியிருக்கின்றனர்.
எளிமையாக சொன்னால், லெஜண்ட் என்ற வார்த்தைக்கு அடையாளமாக இருப்பவர் இயக்குநர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்க்க நாம் ஆவலாக இருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் நினைவுகூறத்தக்க மணிரத்னத்தின் 5 படங்கள் இதோ...
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் நாயகன். 1987ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஓர் ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. இப்போது வரை வரும் ஒவ்வொரு கேங்ஸ்டர் படத்திலும் நாயகனின் சாயல் இருக்கும்.
ரஜினி மற்றும் மம்முட்டியை வைத்து மணிரத்னம் இயக்கிய திரைப்படம். புராணக் கதைகளை தழுவி திரைக்கதை எழுதுவதில் மணிரத்னம் ஓர் மாஸ்டர் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு. இதில் ரஜினியின் பாத்திரம் மகாபாரதத்தில் வரும் கர்ணன் பாத்திரத்தை தழுவி எழுதப்பட்டிருந்தது.
தளபதி மகாபாரதம் என்றால் ராவணன் இராமாயணம். ஆனால் கதை இராவணனுடையது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினி பாத்திரங்களில் நடிக்கும் விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று புராணங்களின் சாயலில் படங்களை எடுத்து வந்த மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுப் படத்தை இப்போது இயக்கியுள்ளார்.
ஒரு நாயகன், ஒரு நாயகி, ஒரு வில்லன் என்றில்லாமல் மூன்று நாயகர்களைக் கொண்ட கதையாக மணிரத்னம் இயக்கிய திரைப்படம் ஆய்த எழுத்து. சூர்யா, மாதவன், சித்தார்த், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், ஈஷா தியோல் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதேப் போலவே பொன்னியின் செல்வனிலும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகிய மூன்று நாயகர்கள் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என பெண் கதாப்பாத்திரங்களும் இங்கு அதிகம்.
அடிப்படையில் சுந்தர சோழருக்கு அடுத்ததாக அரியணை ஏறப்போவது யார்? என்ற அரசியல் கேள்வி தான் பொன்னியின் செல்வன் படத்தின் கதை. அரசியலுக்கு மிக நெருக்கமாக மணிரத்னம் இயக்கியத் திரைப்படம் இருவர். கட்சித் தலைவர், மாநில முதல்வர் என்ற அரியணைகளைப் பிடிக்க போட்டிப் போடும் இரண்டு நண்பர்களில் கதை தான் இருவர். பிரகாஷ் ராஜ் மற்றும் மோகன் லால் இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust