அஜித்குமார் : குழந்தை நட்சத்திரம் முதல் வலிமை வரை - 50 அட்டகாச தகவல்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குத் தமிழ்த் திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டதாக முதல்வர் முன்னிலையில் மேடையில் பேசினார் அஜித். இந்தத் துணிச்சலான பேச்சுக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி தன் பாராட்டை வெளிப்படுத்தினார்.
Ajith kumar
Ajith kumar Twitter
Published on

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். வரும் மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்குமார் தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள், சிரியன் எடிட் செய்து வெளியிட்டு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அஜித்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை இங்கு நினைவு கூர்ந்து பார்க்கலாம்.

1971 மே 1 – ஹைதரபாத்தில் சுப்பிரமணியம்- மோஹினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

1990 ஏப்ரல் 13 –‘என் வீடு என் கணவர்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ஒரு பாடலில் பள்ளி மாணவராகத் தலைகாட்டியிருப்பார் அஜித். இதுவே அவர் திரையில் தோன்றிய முதல் திரைப்படம்.

1993 ஜூன் 4 – அஜித் நாயகனாக நடித்த ‘அமராவதி’ வெளியானது. இதற்கு முன்பே ‘பிரேம புஸ்தகம்’ என்னும் தெலுங்குப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானாலும் அது தாமதமாகவே வெளியானது.

1995 ஆகஸ்ட் 5 – அஜித் தன்னுடைய சக போட்டியாளர் விஜய்யுடன் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான ‘ராஜாவின் பார்வையிலே’ வெளியானது.

1995 செப்டம்பர் 8 – அஜித்தின் முதல் வெற்றிப் படம் ‘ஆசை’ வெளியானது. மணிரத்னம் தயாரிக்க வசந்த் இயக்கிய படம் இது. அஜித் இரண்டு பெரும் ஆளுமைகளுடன் இணைந்த முதல் படம் என்கிற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்ட படம்.

1996 ஜூலை 12 – அஜித் நடித்த ‘காதல் கோட்டை’ வெளியானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று, 3 பிரிவுகளில் தேசிய விருதுகளையும் 5 பிரிவுகளில் தமிழக அரசின் விருதுகளையும் வென்றது.

1999 ஏப்ரல் 30 – ‘வாலி’ வெளியானது. அஜித்தின் முதல் இரட்டை வேடப் படம். அவர் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த முதல் படம்.

1999 ஜூன் – ‘அமர்க்களம்’ படப்பிடிப்புத் தளத்தில் உடன் நடித்த ஷாலினியிடம் அஜித் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

Ajith shalini
Ajith shaliniTwitter

1999 ஆகஸ்ட் 13 - அஜித்தின் 25ஆம் திரைப்படமான ’அமர்க்களம்’ வெளியானது.

2000 ஏப்ரல் – சென்னையில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது.

2001 ஜனவரி 14 – ‘தீனா’ படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படம் என்பதோடு அஜித்துக்கு நிரந்தரமாக நிலைத்துவிட்ட செல்லப் பெயரான ‘தல’ இந்தப் படத்தின் மூலம்தான் கிடைத்தது. சென்னை பேச்சு வழக்கில் தலைவன் என்பதன் சுருக்கமே தல.

2001 ஜூன் 8 – சரவண சுப்பையாவின் ‘சிட்டிசன்’ வெளியானது. இந்தப் படத்தில் உடல் எடை அதிகம் கொண்ட அரசியல்வாதி, ஒல்லியான அரசு அதிகாரி, முகம் சிதைந்த முதியவர், மீனவர், காவல்துறை அதிகாரி என ஒன்பது வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றினார் அஜித்.

2004 நவம்பர் 12 – சரண் இயக்கிய ‘அட்டகாசம்’ வெளியானது. இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இது 50ஆம் இரட்டை வேடப் படம் என்னும் தகவலை ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் பதிவு செய்தார்.

2006 அக்டோபர் 20 – அஜித் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்த ‘வரலாறு’ நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. தொடர் தோல்விகளாலும் நீண்ட இடைவெளிகளாலும் தொய்வுற்றிருந்த அஜித்தின் திரை வாழ்க்கை புத்தெழுச்சி பெற்றது.

2007 டிசம்பர் 14 – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வெற்றிப் படமான ‘பில்லா’ (1980)வின் மறு ஆக்கத்தில் அஜித் நடித்தார். உள்ளடக்கத்தைத் தக்கவைத்து உருவாக்கத்தில் காலமாற்றத்துக்கேற்ற அதிநவீனத்தன்மையை இழைத்து உருவாக்கப்பட்டிருந்த ‘பில்லா’ (2007) மிகப் பெரிய வெற்றி பெற்றது. அஜித்தின் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

Ajith
Ajith Twitter

2008 ஜனவரி 3 – அஜித்-ஷாலினி இணையருக்கு மகள் பிறந்தார். தங்கள் முதல் குழந்தைக்கு அனோஷ்கா என்று பெயர் வைத்தனர்.

2010 – எஃப்.ஐ.ஏ ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்றார்.

2011 ஆகஸ்ட் 31 – அஜித்தின் 50ஆம் திரைப்படமான ‘மங்காத்தா’ வெளியானது. அஜித் முழுமையான எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட நாயகனாக நடித்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திலிருந்து அஜித் தன் அசலான கறுப்பு-வெள்ளை தலைமுடியுடன் நடிக்கத் தொடங்கினார்.

2014 ஜனவரி 10 – விஜயா ப்ரொடக்சஷன்ஸ் தயாரித்த ‘வீரம்’ படம் வெளியானது. அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்து மனிதனாகப் படம் முழுக்க வெள்ளை வேட்டி-சட்டையுடன் தோன்றினார். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

Ajith
AjithTwitter

2015 மார்ச் 2 – அஜித்- ஷாலினி இணையருக்கு மகன் பிறந்தார். ஆத்விக் என்று பெயர் சூட்டினர்.

2015 பிப்ரவரி 6 – கெளதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ வெளியானது. பல முறை தட்டிப்போன ரசிகர்களால் பெரிதும் ஏதிபார்க்கப்பட்ட அஜித்-கெளதம் இணைப்பு சாத்தியமான படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

2018 – விமான வடிவமைப்பில் (ஏரோமாடலிங்) அஜித்துக்குத் தனி ஆர்வம் உண்டு. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி மையமான எம்.ஐ.டியின் ஏரோமாடலிங் திட்டமான ‘மிஷண் துரோணா’வில் அஜித் தலைமை ஹெலிகாப்டர் சோதனை விமானியாகவும் ஆளில்லா விமானங்களுக்கான பொறியியல் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

Ajith kumar
சிம்பு, தனுஷ், அஜித் : தமிழ் சினிமா முன்னணி ஹீரோக்கள் நடித்த அடல்ட் படங்கள்
Ajith
Ajith twitter

2019 ஜனவரி 10 – அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் வெளியாகி மிகப் பெரிய வசூலைக் குவித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தோடு ஒரே நாளில் வெளியானாலும் இரண்டு படங்களுமே வசூல் சாதனை புரிந்தன.

2019 ஆகஸ்ட் 8 – விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பாலிவுட் படமான ‘பிங்க்’ தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இந்தப் படத்தில் அஜித் போன்ற ஒரு நட்சத்திர நடிகர் நடித்தது முன்னோடி முயற்சி என்று அனைவராலும் பாராட்டப்பட்டது.

2021 மார்ச் 7 – 46ஆம் தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை ரைஃபில்ஸ் கிளப் சார்பில் பங்கேற்ற அஜித், தங்கப் பதக்கம் உள்பட ஆறு பதக்கங்களை வென்றார்.

2022 பிப்ரவரி 24 - எச். வினோத் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியானது வலிமை. பான் இந்தியா படமாக, உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் வலிமை வெளியாகி வசூல் குவித்தது.

அஜித்தின் அடுத்த படம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith kumar
அஜித் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? | QUIZ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com