நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட சில மிகவும் பிரபலமான திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளி வந்துள்ளன. காந்தி போன்ற படங்கள் வெளிநாட்டுத் தயாரிப்பிலும் வெளி வந்திருக்கின்றன.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் மிகக் கடுமையாக போராடினர். பலர் தமது உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். சிறையில் வாடினர். இவர்களை வழிநடத்திய தலைவர்களும் பலர் இருக்கிறார்கள். அதில் அகிம்சை வழி காந்தியும் புரட்சி வழி பகத்சிங்கும் உண்டு. இத்தகையைத் தலைவர்களைப் பற்றிப் பல திரைப்படப் படைப்பாளிகள் அழகான திரைப்படங்கள் எடுத்து தமது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறார்கள். அவற்றில் சில திரைப்படங்களை இங்கே பார்ப்போம்.
இப்படம் பழங்குடியினரின் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்ததற்காகப் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அல்லூரி சீதாராம ராஜுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம். இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணா சீதாராம் ராஜூவாக நடித்தார். அவரது புகழ் பெற்ற திரையுலக வாழ்க்கையின் மிகச் சிறந்த திரைப்படமாக இப்படம் கருதப்படுகிறது. இப்படம் இதன் தயாரிப்பிற்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும், போராட்டத்தை தத்ரூபமாக சித்தரித்தற்காகவும் பாராட்டப்பட்டது.
காந்தி உலகப் புகழ் பெற்ற தலைவர். அவரது பாத்திரத்தில் யார் நடிப்பது என்பது பல சுற்று தெரிவுகளுக்குப் பிறகு பென் கிங்ஸ்லி எனும் ஆங்கில நடிகரை நடிக்க வைப்பதாக முடிவாகியது. இப்படம் கிங்ஸலியின் வாழ்நாள் சாதனை திரைப்படம் என்றால் மிகையில்லை. அச்சு அசலாக காந்தியாகவே அவர் வாழ்ந்தார். தோற்றம், உடல், நடை,பேச்சு என்றால் இன்றைக்கு நமக்கு நினைவுக்கு வருபவர் கிங்ஸ்லிதான் அதாவது அவர்தான் காந்தி. இந்த அற்புதமான படம் 'சிறந்த படத்திற்கான' ஆஸ்கர் விருதை வென்றது. கூடவே சிறந்த நடிகர் பிரிவில் பென் கிங்ஸ்லி வென்றார். காந்திக்கு இணையான நேரு, பட்டேல் போன்ற தலைவர்கள் பாத்திரத்திலும் வில்லத்தனமான பாத்திரங்களிலும் ரோகினி ஹட்டங்கடி, ஹபீப் தன்வீர், அம்ரிஷ் பூரி மற்றும் சயீத் ஜாஃப்ரி போன்ற நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர்.
துணிச்சலான பகத் சிங்கின் வாழ்க்கையைக் கொண்டாடியதாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கன் தனது நடிப்பிற்காகப் பாராட்டுகளைப் பெற்றார். இப்படத்தில் மறக்க முடியாத பாடல்கள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் இருந்தன. பகத்சிங்கை ஒரு கதாநாயகனாகச் சித்தரித்து இப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஒரு வேளை உண்மையான பகத்சிங்கை மக்கள் திரையில் காணவில்லையோ என்னவோ. ஆனால் தேசிய அளவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம் விருதுகளை இப்படம் வென்றது.
இத்திரைப்படத்தில் 'நேதாஜி' பாத்திரத்தில் நடிகர் சச்சின் கெடேகர் நடித்தார். மேலும் நேதாஜி விடுதலைக்காக அமைத்த இராணுவம் பற்றிய வரலாற்றையும் படம் எடுத்துரைத்தது. திரைப்படம் அதன் நேர்த்தியான நடிப்பு மற்றும் ஈர்க்கக்கூடிய தயாரிப்பு காட்சிகளுக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. முக்கியமாகத் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றது.
இயக்குநர் கேதன் மேத்தாவின் மகத்தான படைப்பு இது. 1857 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு ஊக்கமளிக்கும் துணிச்சலான மங்கள் பாண்டேயின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கிறது. அப்பாத்திரத்தில் பிரபல நடிகர் அமீர் கான் நடித்தார். இத்திரைப்படம் அதன் தயாரிப்பு தரத்திற்காக சர்வதேச பாராட்டைப் பெற்றது. படத்தில் மங்கள் பாண்டேவின் மரண தண்டனைக்குப் பின் ஏற்பட்ட விளைவுகளும் காட்டப்படுகிறது. ராணி முகர்ஜி, அமீஷா படேல் மற்றும் 'பாண்ட் வில்லன்' டோபி ஸ்டீபன்ஸ் போன்ற ஈர்க்கக்கூடிய நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு சவால் விடும் கோட்டியோட் போரில் கேரளாவின் பழசி ராஜா தனது துணிச்சலால் சாமானியர்களுக்கு உத்வேகம் அளித்தார். ஹரிஹரனின் பிரம்மாண்டமான படைப்பில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடித்தார். இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. மெகாஸ்டார் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் இந்தப் படம் முக்கியமானது. இதற்காக அவர் உலகளாவிய பாராட்டைப் பெற்றார்.
இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் பிரம்மாண்டமான படத்தில், 1847 இல் ஆங்கிலேயர்களுடன் போரிட்ட கர்னூலைச் சேர்ந்த துணிச்சலான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் அடிப்படையில் சிரஞ்சீவி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல நட்சத்திர நடிகர்களோடு பல பிரமாண்டமான மற்றும் யதார்த்தமான ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இது வெகுஜனங்களைக் கவர்ந்த படம். படத்தின் இறுதி தருணங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. இதில் தமன்னா மற்றும் நயன்தாரா கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
80ஸ் கிட்ஸ் தலைமுறையில் பள்ளி வாழ்க்கையில் பலரும் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்திருப்பார்கள். பட்டிதொட்டிகளிலெல்லாம் இப்படத்தின் உரையாடல்கள் ஒலித்தன. எங்களோடு வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா, உனக்கு ஏன் கட்டவேண்டும் வரி என்று சிவாஜி, கட்டபொம்மனாக ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் காட்சியில் மனதைப் பறிகொடுக்காதவர்கள் யாருமில்லை. ஊமைத்துரை, கட்டபொம்மனின் மனைவி, ஜாக்சன் துரை போன்ற பாத்திரங்களில் பிரபல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பாக்ஸ் ஆபிசில் பெருவெற்றி பெற்ற படமிது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கையில் இதுவும் ஒரு முக்கியமான படம். மேற்கண்ட படங்களைப் போன்று கிட்டூர் சென்னம்மா (கன்னடம், 1962), டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் (ஆங்கிலம், 2000), மணிகர்ணிகா (இந்தி, 2019) போன்றவையும் முக்கியமான படங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust