பெரும்பாலும் இந்த உலகில் வாழும் ஒரு பகுதியினர் பெண்களின் ஆரோக்கியத்தை நிராகரிப்பதிலே குறியாக இருக்கின்றனர். குறிப்பாக, பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தையே… மாதவிடாய் தொடங்கி மெனோபாஸ் வரை, பிரதான திரைப்படங்களில் இந்தத் தலைப்புகளை முன்னிட்டுப் படங்கள் வருகின்றன. ஆனால், பலர் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. எனினும், மாதவிலக்கு பற்றியும் மெனோபாஸ் பற்றியும் பேச வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். அவ்வளவு வளர்ச்சி அடைந்த இந்தக் காலத்திலும் இன்றும் கூட, இந்த விஷயத்தைப் பற்றிப் போதுமான குறிப்புகள் இல்லை. அதனால்தான் மாதவிலக்கு பற்றியும் மெனொபாஸ் பற்றியும் பேசும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலை இங்குத் தொகுத்துள்ளோம்.
பாம்பே பேகம்ஸ் படத்தில் பெண்களுக்கான ரோலில் வலிமையான ரோல்களில் பெண்களைச் சித்தரித்ததற்காக நிறையப் பாராட்டுகளை இப்படம் பெற்றது. பெண்ணின் உண்மையான சித்தரிப்புக்கு வழிவகுத்த விஷயங்களில் ஒன்று, பூஜா பட்டின் கதாபாத்திரமான ராணிதான். ஒரு நடுத்தர வயது பெண், தன்னுடைய மெனோபாஸ் காலத்தில் ஆண் ஆதிக்கம் நிறைந்த சூழலில் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிகிறார். அவர் எதிர்கொள்வது என்ன என்பதை அழகாய் எடுத்துச்சொல்கிறது இப்படம்.
நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில், ஜீன் மில்பர்ன் (கில்லியன் ஆண்டர்சன்) தன் மருத்துவரிடம் மெனொபாஸ் பற்றிப் பேசுவதைப் பார்க்கலாம். அவளது உடலில் ஏற்படும் சோர்வு, மெனோபாஸ் சார்ந்த பல அறிகுறிகள் இருப்பதாக மருத்துவரிடம் கூறுவாள். மருத்துவரும் ஜீன்மில்பர்ன் பெண்ணின் உடல் குறித்தும் மெனொபாஸ் குறித்தும் நிறையப் பேசுகிறார்கள். இவர்கள் சொல்வது எல்லாமே சரிதான். பெண்கள் தங்கள் உடலைப் பற்றிப் பேசுவதை அவசியம் பாருங்கள் மக்களே!
ஃப்ளீபேக்கின் இரண்டாவது சீசனில், கிறிஸ்டின் ஸ்காட் தாமஸின் மோனோலாக் வைரலானதை இந்த உலகமே கண்டது. அது பெண்மை பற்றிய விவரிப்பு என்பதால் மிக விரைவாக வைரலானது. அதில், மெனோபாஸ் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அவர் பேசியுள்ளார். இனி மாதவிடாய் காலம் இல்லை; பிரசவங்கள் இல்லை எனப் பெண்ணின் உடல் மற்றும் மனம் பயணத்தைப் பற்றிப் பேசி இருக்கிறார். ஆனால், இந்த மாதிரியான ஹார்மோன் ஏற்ற தாழ்வு காலங்களில் பெண்ணுக்கு ஏற்படுகின்ற மோசமான செயல்பாடுகளைப் பற்றியும் பேசி இருக்கிறார்.
W@40 என்பது ஸ்மிதா சதீஷ் இயக்கிய இசை குறும்படம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் பற்றி பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகரமான மாற்றங்களைப் பற்றியும் இந்தக் குறும்படம் பார்வையாளர்களுக்குக் காட்டுகிறது. மேலும்,உடல் மற்றும் மன மாற்றங்கள் அவர்களது அன்புக்குரியவர்களுடனான உறவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் இப்படம் காட்டுகிறது.
பிரதிக் ஷாவின் மெனோபாஸ் குறும்படம், மெனோபாஸ் அனுபவிக்கும் நபரின் ஒரே கண்ணோட்டத்தில் விவாதிக்கிறது. இக்குறும்படத்தின் முக்கிய ரோலில் நடித்த நாயகி, தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் கவனித்துக்கொள்வதால், தன்னை எப்படிக் கவனித்துக் கொள்ளத் தவறுகிறாள் என்பதைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்கிறது.
பெட்டர் திங்க்ஸ் படம் ‘சாம்’ உடையது. லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் நகைச்சுவை நடிகர் மற்றும் மூன்று மகள்களின் சிங்கள் மதர் பற்றிய கதைதான் ‘பெட்டர் திங்ஸ்’. தொடரின் நான்காவது சீசனில், பெண்ணைப் பற்றியும் பெண்ணின் மூப்படைதல் பற்றியும் தெளிவாகப் பேசுகிறது இத்தொடர். குறிப்பாக, மெனோபாஸ் பற்றிப் பேசுவதை மக்கள் விரும்பாதது. மேலும், மெனோபாஸ் பற்றி விழிப்புணர்வு இல்லாதது எப்படி என்பது பற்றியும் இத்தொடர் விவரிக்கிறது.
கனடிய தொலைக்காட்சி சிட்காம், பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு வருகின்ற ‘பிரசவத்துக்குப் பிறகான மனசோர்வு’ பற்றியும் ‘மெனோபாஸ் காலம் வருவதற்கு முன்பான அறிகுறிகள்’ பற்றியும் இதுபோன்ற ஹார்மோன் மாற்றங்கள் காலத்தில் தாய்மார்களின் தொழில், வேலை சார்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் ‘உடல், மன பிரச்சனைகள்’ பற்றியும் குடும்பத்தில் அவர்கள் சந்திக்கும் ‘பல விஷயங்கள்’ பற்றியும் இப்படம் பேசுகிறது.
இவை தவிர, பல வருடங்களுக்கு முன் ‘சம்திங்ஸ் காட்டா கிவ்’, ‘செக்ஸ் அண்ட் தி சிட்டி’ மற்றும் ‘ஷெர்லி வாலண்டைன்’ போன்ற திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளும் மெனோபாஸ் பற்றிக் குறிப்பிடுவதைப் பார்த்து இருக்கிறோம். இதெல்லாம் அப்பவே அவர்கள் படங்கள் மூலம் எடுத்துச் சொன்னது மகிழ்ச்சியான, பாராட்டக்கூடிய விஷயம்தான். அவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் பெண்களைப் புரிந்துகொள்ளப் பெரும் உதவிதான்.
இதுபோன்ற பெண்கள், பெண்ணின் உடல் மற்றும் மனம் தொடர்பான பிரச்சனைகள் பேசும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு நன்றிகள் சொல்லியே ஆகவேண்டும். அதே வேளையில், மெனோபாஸ் பற்றியும் மாதவிலக்கு பற்றியும் அதிகம் பேச வேண்டிய தேவையும் இக்காலத்தில் உள்ளது என்பதை இங்குப் பதிவு செய்கிறோம். எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளும் படங்களும் அதிக அளவில் வரவேற்கப்படுகின்றன. சொல்லப்போனால், அவசியம் தேவைப்படுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com