Kamal Haasan : கபில் சர்மாவை சந்தித்த உலக நாயகன் - இதுதான் காரணமா?

ஹிந்தியில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான கபில் சர்மா ஷோவில் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். அடுத்த மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் விக்ரம் படத்தின் ப்ரொமோஷனுக்காக பங்கேற்றார் என தகவல்
கமல் ஹாசன்
கமல் ஹாசன்Twitter
Published on

ஹிந்தி நிகழ்ச்சியான கபில் சர்மா ஷோ நாடு முழுவதும் பேசப்படும் ஒரு காமெடி ரியாலிட்டி ஷோ. முதலில் ஹிந்தி நடிகர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், வர வர எல்லா மொழி நடிகர், நடிகைகள், படக்குழுவினர் என அனைவரும் பங்குகொள்ளத் தொடங்கியுள்ளனர். படக்குழுவினர், வரப்போகும், அல்லது சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் தங்கள் படங்களுக்கு ப்ரொமோஷனுக்காக இதில் பங்கேற்பர்.

படக்குழுவினரை விருந்தினர்களாக அழைத்து, படத்தைப் பற்றிய தகவல்களை கலந்துரையாடியும், படக்குழுவினரை, கதையைக் கலாய்த்தும் ஃபன் செய்யும் ஒரு தவிர்க்கமுடியாத டீவி நிகழ்ச்சி தான் கபில் சர்மா ஷோ.

இப்போது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கபில் சர்மா, உலக நாயகன் கமல் ஹாசனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது. ஆஃப் வைட் ஜாக்கெட், அதே நிற சட்டை, ஒரு டெனிம் பேன்ட் மற்றும் வெள்ளை நிற ஸ்னீக்கருடன் கூலாக, எளிமையாக வந்திருந்த காதல் இளவரசன், நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் ஷர்மாவை கட்டி அனைத்து கொண்டும் ஒரு புகைப்படத்திற்கு போஸ் செய்துள்ளார்.

கமல்-கபில்
கமல்-கபில்Twitter

சரி இதற்கும், கபில் சர்மா ஷோவுக்கும் என்ன லிங்க்??

உலகநாயகன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து, அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இதை தன் ட்விட்டர் பக்கத்தில் இருவரும் பகிர்ந்து, பரஸ்பரம் தங்களோடு செலவிட்ட நேரத்தை நினைத்து நெகிழ்வதாகவும் சொல்லிக்கொண்டனர்.

கமல் ஹாசன்
Vanitha vijayakumar : வனிதாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

இது குறித்து நடிகர் கமல் கூறியதாவது, "உங்களோடு இந்த நிகழ்ச்சியில் இருந்த நேரம் மகிழ்ச்சியளித்தது. அதீத செயல் திறன் கொண்ட குழுவினரோடு இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சி 20ஆம் ஆண்டை எட்டும்போது நான் மீண்டும் வந்து பங்கேற்பேன். இடைப்பட்ட காலத்திலும் சந்திப்போம்" என்றார்.

அதை ரீட்வீட் செய்து, பதிலளித்த கபில், எனது "கனவு நிஜமானது, தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவானோடு நேரம் செலவிட்டது மகிழ்ச்சி என்றார். எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு நன்றி" என்றும், ரீலிலும், ரியலிலும் கமல் நல்ல மனிதர் என்று வியந்திருந்தார் கபில்.

இதற்கு முன்னர் ஆர் ஆர் ஆர், பாகுபலி படக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர். இவற்றைத் தொடர்ந்து இப்போது ஒரு தமிழ் படக்குழு நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com



Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com