ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துக்கொண்ட பெண் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரா? யார் இவர்?

இவரது திருமணம் மைசூரில் நடந்திருக்கிறது. பல வருடங்களாக சங்கீதாவை ரெடின் காதலித்து வந்ததாக அவரது நெருங்கிய நண்பரான டான்ஸ் மாஸ்டர் சதீஷ் விகடனுக்கு கூறியிருக்கிறார். விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு இருக்கும் என்ற தகவலும் உலா வருகிறது.
ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துக்கொண்ட பெண் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரா? யார் இவர்?
ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துக்கொண்ட பெண் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரா? யார் இவர்?Twitter

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா என்ற சின்னத்திரை நடிகையை திருமணம் செய்துக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தவர் ரெடின் கிங்ஸ்லி. இவருக்கு தற்போது வயது 46.

பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் எண்ட்ரி கொடுத்த ரெடின் அஜித்குமார் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தின் ருக்கு ருக்கு பாடலில் இடம்பெற்றிருப்பார். அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி ஏற்பாட்டு செய்யும் தொழிலை செய்து வந்தார். அந்த சமயத்தில் இயக்குநர் நெல்சன் திலீப் குமாருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

அதன் மூலம் நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்தார். இப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ரெடின் கிங்ஸ்லி.

அதன் பின்னர் இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர், ரஜினிகாந்தின் அண்ணாத்த, ஜெயிலர், விஜய்யின் பீஸ்ட் என பல படங்களில் நடித்தார். அதில் இடம்பெற்ற அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின

தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகராக இருக்கும் ரெட்டின் கிங்ஸ்லி, நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணம் மைசூரில் நடந்திருக்கிறது. பல வருடங்களாக சங்கீதாவை ரெடின் காதலித்து வந்ததாக அவரது நெருங்கிய நண்பரான டான்ஸ் மாஸ்டர் சதீஷ் விகடனுக்கு கூறியிருக்கிறார். விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நடக்கும் என்ற தகவலும் உலா வருகிறது.

யார் இவர்?

தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் நடிகையான சங்கீதா, பல சீரியல்களில் தோன்றிருக்கிறார். சங்கீதா மாஸ்டர் திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருப்பார்.

இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ஆனந்த ராகம்' சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துக்கொண்ட பெண் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரா? யார் இவர்?
கவினுக்கு திருமணம்; மணப்பெண் லாஸ்லியாவின் Stylist ஆ? யார் இந்த மோனிக்கா டேவிட்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com