” Uncle என்னைய பாக்க வாங்க”- அடம்பிடிக்கும் குழந்தைக்கு Video Call பேசிய நடிகர் விஜய்
” Uncle என்னைய பாக்க வாங்க”- அடம்பிடிக்கும் குழந்தைக்கு Video Call பேசிய நடிகர் விஜய்Twitter

”Vijay Uncle என்னைய பாக்க வாங்க”- அடம்பிடிக்கும் குழந்தைக்கு Video Call பேசிய நடிகர் விஜய்

வீடியோ காலில் தோசை சாப்பிட்டேன் என்றும் நீங்க ரொம்ப க்யூட்னும் விஜய்யிடம் அந்த குழந்தை பேசும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் நடிகர் என்றால் அது விஜய் என்று சொல்லலாம்.

பல குழந்தைகள் விஜய் பட பாடலுக்கு நடனமாடும் வீடியோ அவ்வபோது இணையத்தில் வைரலாகும்.

இந்த நிலையில் விஜய்யின் குட்டி ரசிகை அவரை பார்க்க வேண்டும் என அடம்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

விஜய்
விஜய்Twitter

அந்த வீடியோவில் 'விஜய் அங்கிள் என்னை பார்க்க வரமாடீங்களா?' எங்க வீட்டிக்கு என்னைய பார்க்க வாங்க, வர சொல்லுங்க என பெற்றோர்களிடம் அடம் பிடித்து அழும் வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த குழந்தையின் வீடியோ விஜய்யின் பார்வைக்கு சென்ற நிலையில், திடீரென வீடியோ கால் மூலமாக விஜய் அந்த குழந்தையுடனும், அவரது பெற்றோர்களிடமும் பேசியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோவை புஸ்ஸி ஆனந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை சில நாட்களுக்கு முன்பு தளபதி actorvijay அவர்களை என்னைப் பார்க்க வருமாறு இணையத்தில் வைரலான வீடியோவை உடனடியாக தளபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அக்குழந்தையிடமும் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி குழந்தையின் நலம் விசாரித்தார்.!" என புஸ்ஸி ஆனந்த் ட்வீட் போட்டு அந்த செம க்யூட்டான வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

வீடியோ காலில் தோசை சாப்பிட்டேன் என்றும் நீங்க ரொம்ப க்யூட்னும் விஜய்யிடம் அந்த குழந்தை பேசும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

” Uncle என்னைய பாக்க வாங்க”- அடம்பிடிக்கும் குழந்தைக்கு Video Call பேசிய நடிகர் விஜய்
அஜித், விஜய் எல்லாம் இல்ல; உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்- டாம் க்ரூஸை விஞ்சிய இந்தியர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com