தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தெலுங்கு சினிமா இயக்குநர் வம்ஸி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்துவரும் தளபதி 66 படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் இணைந்துள்ளார். மேலும் கொரோனாவால் வலிமை படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த நடிகை ஜயசுதா, தற்போது இந்த படத்தில் விஜயுடன் நடிக்கவுள்ளர். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயுடன் இணையும் நடிகர் பிரகாஷ் ராஜ், இதுவரை தளபதிக்கு வில்லனாக நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் ரசிகர்கள் வியக்கும், வெறுக்கும் பயங்கர வில்லனாக காட்சியளித்த பிரகாஷ் ராஜ், முத்துப்பாண்டியாக இன்றும் மீம்களில் கொண்டாடப்படுகிறார்.
ஆனால், இந்த படத்தில், பிரகாஷ் ராஜ் இதுவரை நடித்ததற்கு மாறாக, ஒரு பாசிடிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கு முன்னர் நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர் வம்ஸி இயக்கத்தில், தெலுங்கில் பிருந்தாவனம், முன்னா, ஊப்பிரி (தமிழில் தோழா), மற்றும் மகரிஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுவரை வம்ஸியின் கதைகளில் வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ள பிரகாஷ் ராஜை, மீண்டும் ஒரு முக்கிய கேரக்டரில் ரசிகர்கள் எதிர்ப்பாகின்றனர்.
நடிகர் பிரகாஷ் ராஜோடு சேர்த்து, நடிகர்கள் சரத்குமார், பிரபு, ஜயசுதாவும் இணைத்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல். பிரபு இதற்கு முன்னர் விஜயுடன் தெறி, மற்றும் புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையும், பாடலாசிரியர் விவேக் கூடுதல் ஸ்க்ரீன்பிளேவும் எழுதுகிறார்.
தளபதி 66-ல் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரொயினாக முதன்முதலில் தளபதியுடன் ஜோடி சேருகிறார்.
மகரிஷி படத்திற்காக இயக்குநர் வம்ஸி தேசிய விருதும், தோழா படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu