பொன்னியின் செல்வன்: "ஐஸ்வர்யா ராயை பார்த்தால் பொறாமையாக உள்ளது" - நடிகை மீனா ட்வீட்

திரைப்பிரபலங்களும், ரிவ்யூவர்களும், ரசிகர்களும் படம் குறித்து தங்களின் பார்வைகளை பதிவிட்டு வருகின்றனர். மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Aishwarya Rai - Meena
Aishwarya Rai - MeenaTwitter

பொன்னியின் செல்வனில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராயை பார்த்தால் தனக்கு பொறாயாக இருப்பதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

கல்கியின் நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது.

பாசிடிவ் ரிவ்யூக்களை மட்டும் பெற்று வரும் இப்படத்தை, ”தமிழ் சினிமாவின் பெருமை” என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ponniyin selvan review
Ponniyin selvan review Twitter

கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களை இசையமைத்திருக்கிறார். பாடல்களும் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றது.

Aishwarya Rai - Meena
பொன்னியின் செல்வன்: யார் இந்த நந்தினி? சோழர்களுக்கும் இவருக்கும் என்ன பகை?
Aishwarya Raai as Nandhini
Aishwarya Raai as NandhiniTwitter

திரைப்பிரபலங்களும், ரிவ்யூவர்களும், ரசிகர்களும் படம் குறித்து தங்களின் பார்வைகளை பதிவிட்டு வருகின்றனர். மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்துவிட்டு நடிகை மீனா, தனது கருத்துகளை கூறியிருக்கிறார்.

படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த நடிகை மீனா தான் பொன்னியின் செல்வனில் நந்தினியாக நடிக்கவேண்டுமென விரும்பியதாகவும், அதை ஐஸ்வர்யா ராய் செய்துள்ளதை பார்த்தால் பொறாமையாக இருப்பதாகவும் நகைச்சுவையாக கூறியிருந்தார்.

"இதற்கு மேலும் என்னால் பேசாமல் இருக்க முடியாது. மனதில் இருப்பதை சொல்லிவிடவேண்டும். வாழ்வில் முதன் முறையாக எனக்கு ஒருவரை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அது ஐஸ்வர்யா ராய் பச்சன். ஏனெனில், எனது கனவு கதாபாத்திரமாக இருந்த நந்தினியை பாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்" எனக் கூறினார்.

சோழர்களை பழிவாங்க பலவித சூழ்ச்சிகளை தன்னந்தனியாக நிகழ்த்தும் பாண்டியனின் காதலி நந்தினியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

Aishwarya Rai - Meena
பொன்னியின் செல்வன்: படம் பார்க்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com