Leo: விஜய் படத்தில் இணைந்த தனுஷ், அனுராக் கஷ்யப் - லோகேஷின் பிளான் என்ன?

சமீபத்தில் இயக்குநர் அனுராக் கஷ்யப், லோகேஷின் படத்தில் இறந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் லோகேஷ் அக்னராஜ், அனிருத், தனுஷ் உள்ளிட்டோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது
Leo: விஜய் படத்தில் இணைந்த தனுஷ், அனுராக் கஷ்யப் - லோகேஷின் பிளான் என்ன?
Leo: விஜய் படத்தில் இணைந்த தனுஷ், அனுராக் கஷ்யப் - லோகேஷின் பிளான் என்ன?ட்விட்டர்

விஜய் - த்ரிஷா நடிக்கும் லியோ படத்தில் இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது இன்னும் அதிகரித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலி கான், மிஷ்கின் என உச்ச நட்சத்திரங்களின் பெயரால் இத்திரைப்படம் ஏற்கனவே ஹைப் செய்து வருகிறது.

மேலும், டைட்டில் ரிவீல் செய்யும் வீடியோ, முதல் பாடலின் வீடியோக்கள் வந்தபோதும், லோகேஷின் மற்ற படங்களுடன் லியோ படத்திற்கு இருந்த ஒற்றுமையை வைத்து, படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் வரும் என கணிப்புகளை முன்வைத்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில், தற்போது இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப், மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிராக வலம் வரும் தனுஷ் ஆகியோர் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இயக்குநர் அனுராக் கஷ்யப், லோகேஷின் படத்தில் இறந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

“எனக்கு லோகேஷ் கனகராஜின் படத்தில் முக்கிய வேடம் எல்லாம் தேவையில்லை. ஒரு கௌரவமான சாவு மட்டும் போது, அவர் தன் கதாபாத்திரங்களின் மரணங்களை அழகாக்குகிறார்” என்று கூறியிருந்தார் கஷ்யப்.

Leo: விஜய் படத்தில் இணைந்த தனுஷ், அனுராக் கஷ்யப் - லோகேஷின் பிளான் என்ன?
Thalapathy67: ”இது 100% என்னோட படம்” - விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

இதனையடுத்து, தற்போது மூவி டிராக்கரான ஸ்ரீதர் பிள்ளை அனுராக் கஷ்யப் லியோவில் இணைந்துள்ளதாக நேற்று ட்வீட் செய்திருந்தார்.

இயக்குநர் அனுராக் கஷ்யப்புக்கு தமிழ் படங்களின் மீது தனிப்பட்ட காதல் இருக்கிறது என்றே கூறலாம். அவர் பல சந்தர்ப்பங்களில் தமிழ் சினிமாவை போற்றியுள்ளார். மேலும், சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தான் தன்னை Gangs of Wasseypur படத்தை எடுக்கவைத்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தகவல்களின் அடிப்படையில், நடிகர் தனுஷும் லியோ படத்தில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், தனது கடைசி படத்தை லோகேஷின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தனுஷ் லியோ படத்தில் இணையவுள்ள தகவல் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது.

குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் லோகேஷ் அக்னராஜ், அனிருத், தனுஷ் உள்ளிட்டோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி கேள்விகளை எழுப்பியது

படக்குழு இன்னும் இத்தகவல்கள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leo: விஜய் படத்தில் இணைந்த தனுஷ், அனுராக் கஷ்யப் - லோகேஷின் பிளான் என்ன?
Leo : சர்ச்சையில் சிக்கிய லியோ பட பாடல்; நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com