அஜித் - விக்னேஷ் சிவன்

அஜித் - விக்னேஷ் சிவன்

Twitter

அஜித், விக்னேஷ் சிவன், லைகா : மெகா கூட்டணி - அதிகாரபூர்வ அறிவிப்பு

எச். வினோத்தின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவனுக்கு அவர் மூலமாக அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கி, அடுத்த வருடத்தின் இடையில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
Published on

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இந்த ஆண்டே வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தன. இன்று அது அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>Announcement</p></div>

Announcement

Twitter

அஜித் - விக்னேஷ் சிவன் - லைகா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதைப் பார்க்க ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அஜித்தின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன், வலிமை படத்தில் பாடல்களை எழுதி உள்ளார். எச். வினோத்தின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவனுக்கு அவர் மூலமாக அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கி, அடுத்த வருடத்தின் இடையில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

logo
Newssense
newssense.vikatan.com