நடிகர் அஜித்தின் தந்தை காலமானார் - திரையுலகினர் இரங்கல்
நடிகர் அஜித்தின் தந்தை காலமானார் - திரையுலகினர் இரங்கல்Twitter

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார் - திரையுலகினர் இரங்கல்!

அஜித் குமாரின் தந்தை பி. சுப்பிரமணியமுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார்.
Published on

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவருக்கு பக்கவாதம் என்பதால் வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலமானார்.

அவருக்கு வயது (86). மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி. சுப்ரமணியம் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அஜித்தும், அவரது அப்பாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார் - திரையுலகினர் இரங்கல்
அஜித் குமார் பகாசூரன் படத்தை பாராட்டினாரா? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com