Ajith: சினிமாவிலிருந்து ஓய்வு; 60 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், ஏகே62விற்கு பிறகு அஜித் நடிப்பிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவனுடனான படத்தை முடித்த பிறகு, அடுத்த படத்திற்கு இவரது டேட்ஸை வாங்க பல தயாரிப்பாளர்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அஜித்
அஜித்Twitter

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக வெளியாகியூள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், புரொமோஷன்களை முடித்துவிட்டு பைக் ட்ராவெல்லில் உள்ளார். அந்த பைக் டிரிப் அக்டோபர் 19 முடிவடையும் என்றுக் கூறப்படுகிறது

துணிவு படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். தற்போதைக்கு ஏகே62 என்று அழைக்கப்படும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், ஏகே62விற்கு பிறகு அஜித் நடிப்பிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவனுடனான படத்தை முடித்த பிறகு, அடுத்த படத்திற்கு இவரது டேட்ஸை வாங்க பல தயாரிப்பாளர்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அஜித்
Ajith Kumar : சைக்கிளிங் முதல் சமையல் வரை - அஜித்துக்கு பிடித்த இந்த விஷயங்கள் தெரியுமா?
அஜித்
அஜித்Twitter

ஆனால், அந்த படத்திற்கு பிறகு, அஜித் குறைந்தது ஒன்றரை வருடம் சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கவுள்ளதாக நியூஸ்18 தளம் தெரிவிக்கிறது. மேலும் அதில் நடிகர் அஜித் 2 பைக்கர்ஸுடன் இனைந்து 60 நாடுகள், 7 கண்டங்களுக்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோட் டிரிப் குறைந்தது 18 மாதங்கள் நீடிக்கும் என்பதால், அஜித் அந்த காலக்கட்டத்தில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com