அஜித்தின் வலிமை படம் : வியக்க வைக்கும் முன்பதிவு வசூல் | ஆச்சரியத்தில் திரைத்துறையினர்!

ஏற்கெனவே தீரன் அதிகாரம் ஒன்று என்ற ஆக்‌ஷன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார் என்பதனால் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் ஸ்டண்ட்களுடன் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
அஜித்

அஜித்

Twitter

Published on

2019-ம் ஆண்டு நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகிறது அஜித்தின் வலிமை திரைப்படம். இளம் இயக்குனர் ஹெச்.வினோத் இந்தப் படத்தையும் இயக்குகிறார். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமும் இதே கூட்டணியில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>அஜித்</p></div>
கோலிவுட் நடிகர்களும், அவர்களின் விலையுயர்ந்த Super Bike -களும்!

இந்த படத்தில் ஜான்வி கபூர், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>வலிமை படக்குழு</p></div>

வலிமை படக்குழு

Twitter

இந்த படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி பிரம்மாண்டமாகத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே தீரன் அதிகாரம் ஒன்று என்ற ஆக்‌ஷன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார் என்பதனால் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் ஸ்டண்ட்களுடன் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

தற்போது வலிமை படத்தின் டீசர்கள் வெளியாக வரவேற்பைப் பெற்று வருகின்றன. திரையரங்குகளுக்கான முன் பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில் USAவில் ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 22.5 லட்சம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்த வசூலால் வலிமை திரைப்படம் முன்பதிவிலேயே வசூல் சாதனை படைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com