Akshay Kumar: "இனி இந்த தவறை செய்ய மாட்டேன்" - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அக்‌ஷய் குமார்

அந்த விளம்பரம் வெளியானது முதல் நெட்டிசன்கள் அக்‌ஷய் குமாரை கேலி செய்யத் தொடங்கினர். அதிக ட்ரோல் போஸ்ட்கள், மீம்கள் என ட்விட்டரில் கிண்டல்கள் பறந்தன. இறுதியாக அக்‌ஷய் குமார் மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளார்.
அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்Twitter
Published on

கடந்த 16ம் தேதி விமல் எலைச்சி எனும் பான் மசாலா நிறுவனத்தில் அந்த விளம்பரம் வெளியானது. அதில் அக்‌ஷய் குமார், ஷாருக் கான், அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்திருந்தனர்

அஜய் தேவ்கன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஏற்கெனவே அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்த நிலையில் அதில் மற்றொரு பிராண்ட் அம்பாசிடராக இணைந்திருந்தார் அக்‌ஷய் குமார். இந்த விளம்பரத்திற்குப் பலத்த எதிர்ப்புகளும் கேலி, கிண்டல்களும் எழுந்தன.

பாலிவுட் நடிகர் அக்‌ஷக் குமார் 54 வயதிலும் தனது உடலை மிக மிடுக்காக வைத்திருப்பவர். ரசிகர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து நேர்காணல்களில் எடுத்துரைத்திருக்கிறார். அவரது ஃபிட்னஸ்காகவே அவரை பல ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக் குட்கா விளம்பரத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அக்‌ஷய் குமார்
ஆயுஷ்மான் குரானா அருந்தும் தாய்ப்பால் Milk Shake - Celebrities அட்டகாசங்கள்!

இதனைத் தொடர்ந்து அக்‌ஷய் குமார் சமூக வலைத்தளங்களில் கேலிசெய்யப்பட்டார். சிலர் அவருடைய பழைய வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தனர். அதில் அவர் குட்கா நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய மாட்டேன் எனக் கூறியிருந்தார். சிலர் அவருடைய முடிவு வருத்தமளிப்பதாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்கு அவரது நல விரும்பிகள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், வருங்காலத்தில் விளம்பரங்களைக் கவனமாகத் தேர்வு செய்வதாகவும் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முடியும் வரை அந்த விளம்பரம் ஒளிபரப்பப்படும் எனக் கூறியுள்ள அக்‌ஷய் குமார். ஒப்பந்த காலம் எவ்வளவு நாட்கள் என்பது குறித்த தகவல்களைக் கூறவில்லை.

அக்‌ஷய் குமார்
KGF Quiz : கேஜிஎஃப் 2 திரைப்படம் பற்றி என்னென்ன தெரியும் உங்களுக்கு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com