'WeStandWithARR' ட்விட்டரில் இசைப்புயலுக்கு வலுக்கும் ஆதரவு - ரசிகர்கள் கூறுவது என்ன?

ரஹ்மான் இதற்கு தானே பொறுப்பேற்பதாக பதிவிட்டிருந்தார். டிக்கெட் பணத்தை திருப்பி தருவதாகவும் சொல்லியிருந்தார். 2000த்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாகவும், பணம் திருப்பிகொடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் ரஹ்மானின் உதவியாளர் தெரிவித்திருக்கிறார்.
'WeStandWithARR' ட்விட்டரில் இசைப்புயலுக்கு வலுக்கும் ஆதரவு - ரசிகர்கள் கூறுவது என்ன?
'WeStandWithARR' ட்விட்டரில் இசைப்புயலுக்கு வலுக்கும் ஆதரவு - ரசிகர்கள் கூறுவது என்ன?twitter
Published on

மறக்குமா நெஞ்சம் கான்சர்ட் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை ஏசிடிசி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சி, மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தேதி மாறியபோது டிக்கெட்டுகள் விற்பதில் தொடங்கி குளறுபடிகள் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் கூறுகின்றனர். மூன்று தினங்களுக்கு முன் ஆதித்யா ராம் பேலஸில் நடந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் படுமோசமாக இருந்துள்ளது.

நுழைவுச் சீட்டுகளை சரிபார்க்க தவறியது, பார்க்கிங் பிரச்சினை, கூட்ட நெரிசல், குழந்தைகள் தொலைந்து போவது, பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் என அந்த இரவு கோரமாக மாறியது தான், மூன்று நாட்கள் கடந்தும் அடங்காத சர்ச்சையாக இருந்து வருகிறது.

நிகழ்ச்சிக்கு முறையாக பாதுகாப்பு அளிக்காத போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம், ஏசிடிசி நிறுவனம் மீது வழக்கு பதிவு என நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது. அனுபவமில்லாத கல்லூரி மாணவர்களை பணியமர்த்தியதில் தான் குளறுபடி ஏற்பட்டது என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏசிடிசி நிறுவனத்தின் சார்பில், இந்த பிரச்சினைகளுக்கும் ஏ ஆர் ரஹ்மானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நூறு சதவிகித பொறுப்பை நாங்களே ஏற்கிறோம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்

எனினும், இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அனைவரது விரல்களும் சுட்டிக்காட்டுவது இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை தான்.

இவர் வசதியாக நிகழ்ச்சியை அறிவித்துவிட்டு, டிக்கெட் காசை பெற்றுவிட்டார். கான்சர்ட்டுக்கு வந்த திரைப்பிரபலங்கள் வசதியாக வந்து சென்றனர். பொதுமக்களாகிய நாங்கள் அல்லல்ப்பட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்தோம்.

மூன்று நாட்களாக சர்ச்சையாகி வந்தாலும், இசையமைப்பாளர் இதுவரை வெளியில் முகம் காட்டவில்லை. பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகினேன் என பெண் ரசிகர்கள் வெளிப்படையாக கூறியதற்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை.

ரஹ்மான் இதற்கு தானே பொறுப்பேற்பதாக பதிவிட்டிருந்தார். டிக்கெட் பணத்தை திருப்பி தருவதாகவும் சொல்லியிருந்தார். 2000த்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாகவும், பணம் திருப்பிகொடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் ரஹ்மானின் உதவியாளர் தெரிவித்திருக்கிறார்.

அவருக்கும் நடந்த அசம்பாவிதங்களுக்கும் சம்பந்தம் இல்லை, அவரை தாக்கி யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் அந்த வீடியொ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது

எனினும், மறக்குமா நெஞ்சம், மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது என்பதே ரசிகர்களின் குமுறல்.

ஆனால் இது ஒரு தரப்பு தான். திரைப்பிரபலங்கள், பாடகர்கள், ரசிகர்கள் ஒரு கூட்டம் கூட ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஏ ஆர் ரஹ்மானின் முந்தைய இசை நிகழ்ச்சிகள் மூலமாக அவர் செய்த உதவிகளை பட்டியலிடுவதும், இது ரஹ்மானின் தவறு இல்லை என்பதுமாக அவர்கள் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து மறக்குமா நெஞ்சம் என்ற ஹேஷ் டேக் மற்றும் We Stand with ARR என்கிற ஹேஷ் டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ரஹ்மான் ஒரு தனி மனிதர் எனவும், இதற்கு அவர் எப்படி பொறுப்பாவார்? அவரை சாடும் முன் மனிதத்துடன் பேசுங்கள் என்பது ரஹ்மான் ஆதரவாளிகளின் வாதம்.

கவிஞர் குட்டி ரேவதி உள்பட, அடுத்தவரை குற்றம் சொல்லும் முன் நம்மைப் பற்றி யோசிக்கவேண்டும் என பதிவிட்டிருந்தனர்.

'WeStandWithARR' ட்விட்டரில் இசைப்புயலுக்கு வலுக்கும் ஆதரவு - ரசிகர்கள் கூறுவது என்ன?
AR Rahman கான்சர்ட் சர்ச்சை - ஆதரவுக் குரல் கொடுத்து கவிஞர் குட்டி ரேவதி முகநூல் பதிவு!

இந்த We Stand with ARR என்கிற ஹேஷ்டேக் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக தான் இருக்கிறது.

காரணம், நடந்த அசம்பாவிதங்களுக்கு, பொறுப்பேற்கிறேன் என்றும், காசை திருப்பி தருகிறேன் என்றும், மன்னிப்பு கேட்கிறேன் என்றும் சமூக வலைதளம் மூலமாக மறைந்துகொண்டு பேசுவது எங்களுக்கு வேண்டாம் என்கிறது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு.

ரஹ்மான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அணுகி மன்னிப்பு கோரி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இசையமைப்பாளரின் தரப்பில் இருந்து ஒரு நேரடி மன்னிப்பு வரவில்லை, பொறுப்பை ஏற்கிறேன் என்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவும், ”நமக்கு எதுக்குடா வம்பு” என்பது போன்ற கண்துடைப்பு செய்தியாகவே இருக்கிறது என்று கூறுகின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் இசைக் கடவுளாக, தங்களில் ஒருவராக பார்க்கும் ரஹ்மானின் பதில், இத்தனை இன்னல்களுக்கு ஒரு சமூக வலைதள பதிவு தானா?

'WeStandWithARR' ட்விட்டரில் இசைப்புயலுக்கு வலுக்கும் ஆதரவு - ரசிகர்கள் கூறுவது என்ன?
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் அவதி - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com