AR Rahman : "நீ மற்றவர்களுக்காக வாழும்போது..." - அம்மா சொன்ன லைஃப் அட்வைஸ்!
AR Rahman : "நீ மற்றவர்களுக்காக வாழும்போது..." - அம்மா சொன்ன லைஃப் அட்வைஸ்!Twitter

AR Rahman : "நீ மற்றவர்களுக்காக வாழும்போது..." - அம்மா சொன்ன லைஃப் அட்வைஸ்!

உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது, சுயநலமாக இருக்க மாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம், உணவு வாங்கி கொடுக்கலாம், அல்லது வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம். இதுபோன்ற விஷயங்கள்தான் வாழ்க்கையுடன் உங்களை பயணிக்க வைக்கும்.
Published on

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனதின் ஆழத்தில் இருந்து விஷயங்களை அணுகுபவர் என்பதை நாம் அறிவோம். அவரது ஆன்மீகம் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் பேசுபவர்.

சமீபத்தில் தனக்கு தற்கொலை எண்ணம் தோன்றியதாக வெளிப்படையாக பேசியுள்ளார் ரஹ்மான்.

அதனை தனது அம்மாவிடம் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். ரஹ்மானின் அம்மா கூறிய அட்வைஸ்தான் அனைவரது மனங்களையும் ஈர்த்துள்ளது.

"எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என் தாய் "நீ மற்றவர்களுக்காக வாழும்போது உனக்கு இது போன்ற எண்ணங்கள் தோன்றாது” என என்னிடம் கூறினார்.

உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது, சுயநலமாக இருக்க மாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம், உணவு வாங்கி கொடுக்கலாம், அல்லது வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம்.

இதுபோன்ற விஷயங்கள்தான் வாழ்க்கையுடன் உங்களை பயணிக்க வைக்கும்!”

logo
Newssense
newssense.vikatan.com