Riyas - Khatija
Riyas - KhatijaTwitter

AR Rahman Daughter Wedding : இசைப்புயல் மகளுக்கு கல்யாணம் - வைரலாகும் புகைப்படம்

ஏ ஆர் ரஹ்மானின் மகள் கத்தீஜா மற்றும் ஆடியோ இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் மொஹம்மத்தின் திருமணம் நெருங்கிய உறவுகள், நண்பர்களுக்கு மத்தியில் நடந்தேற, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஆஸ்கர் நாயகன்
Published on

ஏ ஆர் ரஹ்மானின் மூத்த மகளும், பாடகருமான கத்தீஜா சவுண்ட் இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் மொஹமத்தை மணம் புரிந்தார். இந்த செய்தியை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ரஹ்மான் பகிர்ந்திருந்தார். கத்தீஜா-ரியாசின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நெருங்கிய உறவினர்கள் புடை சூழ இவர்களது திருமணம் நடந்தது.

ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த புகைப்படத்தில், புது மண ஜோடி கத்தீஜா-ரியாஸ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், மனைவி சயிரா பானு, மகன் அமீன், மகள் ரஹிமா இடம்பெற்றிருந்தனர். இவர்களொடு சமீபத்தில் உயிரிழந்த் ஏ ஆர் ரஹ்மானின் தாயார், கரீமாவின் புகைப்படமும் வைக்கபட்டிருந்தது.

படத்தை பகிர்ந்த இசைப்புயல், "புதுமண தம்பதிகளுக்கு இறைவன் அருள் புரியட்டும். எனது மகளின் திருமணத்திற்கு வாழ்த்திய, வாழ்த்தபோகும் அனைவருக்கும் நன்றி." என் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

Riyas - Khatija
KGF Rocky Bhai : தேடி வந்த பல கோடி மதிப்பிலான வாய்ப்பை மறுத்த நடிகர் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

logo
Newssense
newssense.vikatan.com