Barathi kanamma episode : பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு குழந்தைகளை வைத்துத் தான் கதை நகர்கிறது. அப்பா, அம்மா பாசத்துக்காக ஏங்கும் குழந்தைகள் தான் சீரியலின் ஹைலைட். இன்று வெளியான ப்ரோமோ யூ டியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்துவிட்டது.
லட்சுமி டாக்டர் அங்கிள் தான் தன் அப்பா என்பதைத் தெரிந்து கொண்டு, ஹேமா வீட்டிலேயே ஆல்ட் ஆகி விடுகிறார். பாரதி உடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது லட்சுமிக்கு விக்கல் வந்துவிடுகிறது. பாரதி தண்ணீர் எடுத்து வர எழுந்து செல்லும் போது, எதிர்பாராத விதமாக பாரதி அமர்ந்திருந்த இடத்தில் ஃபேன் கழன்று விடுகிறது. பாரதிக்குப் பழைய காட்சி நியாபகத்திற்கு வருகிறது.
ஹேமா ஆறு மாத குழந்தையாக இருந்தபோது, இப்படி தான் பாரதி மண்டையில் ஃபேன் விழுந்திருக்க வேண்டியது. ஹேமா வீறிட்டு அழுததும், பாரதி என்ன என்று பார்ப்பதற்கு எந்திரிக்கவும், ஃபேன் பாரதி அமர்ந்திருந்த இடத்தில் விழும். இந்த காட்சிக்குப் பிறகு தான் பாரதி ஹேமாவை தன் மகளாக ஏற்றுக் கொண்டு பாசத்தைக் கொட்டுவார். பாரதியின் தலையில் ஃபேன் விழுந்திருந்தால் சீரியல் நல்லபடியாக முடிந்திருக்கும் என்பதே ரசிகர்களின் புலம்பலாக உள்ளது.
இன்றைய எபிசோடில், ஹேமா, லட்சுமி இருவரும் தங்கள் பள்ளி பேருந்தில் பாரதியையும், கண்ணம்மாவையும் வரும்படி அழைக்கிறார்கள். அவர்கள் அடம் பிடித்ததால் கண்ணம்மா பேருந்தில் வரச் சம்மதிக்கிறார். ஹேமா, லட்சுமி பேருந்து பயணத்தை ஜாலியாக அனுபவிக்கின்றனர். கண்ணம்மாவும்,பாரதியும் எதேச்சையாக மோதிக் கொள்வதும், கட்டிக் கொள்வதுமாகப் பேருந்து பயணம் நீள்கிறது.
கண்ணம்மாவுக்கு லட்சுமி மீது சந்தேகம் வருகிறது. வழக்கத்துக்கு மாறாக பாரதியிடம் லட்சுமி உறவாடுவதாகத் தோன்றியது. கண்ணம்மா லட்சுமியை அழைத்து விசாரிக்கிறார். லட்சுமி கேசுவலாக ``அதுவும் நம்ம வீடு தான மா. நீ தான சொல்லுவ, பாட்டி தாத்தா சித்தி சித்தப்பா-ன்னு அதான் அவங்க கூட பழகுறேன்’’ என்கிறாள். அதுமட்டுமின்றி பள்ளியில் கொடுக்கப்படும் ஃபார்ம் ஒன்றில் அப்பா என்னும் இடத்தில் பாரதி என எழுதுகிறாள் லட்சுமி. இதனைப் பார்த்த கண்ணம்மா அதிர்ச்சியடைகிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பது அடுத்த எபிசோடில்!