சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை - வெளியானது சம்பள விவரம்

கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை
அண்ணாமலைTwitter

முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, தற்போது தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இவர் தற்போது சினிமாவில் நடித்து புது அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்லும் வழக்கம் மாறி, அரசியல் இருந்து சினிமாவில் நடிப்பது பேஷனாகி விட்டது.

Annamalai
AnnamalaiTwitter

2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

அரபி என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளார்.

இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை ரூ.1 மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

இதற்கிடையில் இன்று மாலை 4 மணிக்கு அரபி படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அண்ணாமலையின் இந்த முதல் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக பாஜகவினர் காத்துக்கொண்டுள்ளனர்.

அண்ணாமலை
திருவாரூர் பாஜக தலைவர் அண்ணாமலை திரண்ட கூட்டம்: புகைப்படம் போலியா? உண்மை என்ன ? Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com