பிரபல இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் ஈர்த்தார்.
தமிழில் இவர் பாடிய 'வசீகரா', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்', 'யாரோ மனதிலே' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் பாம்பே ஜெயஸ்ரீ லண்டனிற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ரத்தக் கசிவு நோயால் (அன்யூரிசம்) பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளது என அவரது குடும்பத்தார் சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதில், "பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அன்யூரிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, அன்யூரிசம் என்றால் என்ன என்று பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.
அன்யூரிசம் என்பது மூளையில் உள்ள ரத்த நாளங்கள், இதயம் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள பெருந்தமனி, உடலின் மற்ற உறுப்புக்களுக்கான ரத்த நாளங்கள் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கங்களும் , அதனால் ரத்த நாள வெடிப்பு காரணமாக ஏற்படும் ரத்தக் கசிவாகும்.
ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு அல்லது இரத்தக் குழாயின் சுவர் பலவீனமடைவதால் ஏற்படும் வீக்கத்தை அன்யூரிசம் என்கிறோம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust