வாணி ராணி, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் சுட்டி பெண்ணாக நடித்து பிரபலமானவர் நடிகை நேஹா மேனன். குறிப்பாக வாணி ராணி தொடரில் ராதிகா-நேஹா காம்போ பட்டையை கிளப்பும். ராதிகாவின் கடைசி பெண்ணாக தேனு என்னும் ரோலில் துருதுரு குழந்தையாக நடித்து அசத்தி இருப்பார். நேஹா தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வாணி ராணி சீரியல் போன்று இந்த சீரியலிலும் நாயகி பாக்யாவின் கடை குட்டியாக, பள்ளி மாணவியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் எடுத்து பதிவிடும் நேகா, அதிக அளவில் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். 20 வயது பெண்ணான நேஹா தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்டுகளை பக்குவமாக ஹேண்டல் செய்கிறார். அவரின் உடல் பருமன் குறித்தும் குள்ளமாக இருப்பதாகவும் கலாய்ப்பவர்களை உடனடியாக பிளாக் செய்துவிடுவார் நேஹா. சமீபத்தில் தான் சந்திக்கும் உருவ கேலி குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார். அதில் ``இன்ஸ்டாகிராமில் தான் இப்படியெல்லாம் கூட உருவ கேலி செய்வார்களா என்பது எனக்குத் தெரிய வந்தது. என்னை உருவ கேலி செய்து பதிவாகும் கமெண்ட்டை பார்க்கும்போது முன்பெல்லாம் மிகவும் வேதனை அடைவேன். அம்மாவிடம் சொல்லி அழுவேன். எனக்கு ஆறுதல் சொல்லி தேற்றியது அம்மா தான். நம்மைப் பற்றி உருவ கேலி செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது. எதையாவது கமெண்ட் செய்து விட்டு போய்விடுவார்கள். இப்போதெல்லாம் என்னை பற்றி உருவ கேலி செய்பவர்களை உடனே பிளாக் செய்து விடுகிறேன்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
நேஹா மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் சிலர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். நேஹாவின் தங்கைக்கு இப்போது தான் ஒரு வயது ஆகிறது. ``20 வயதில் மகளை வைத்து கொண்டு யாராவது இரண்டாவது குழந்தை பெற்று கொள்வார்களா?’’ என்றெல்லாம் நேஹாவின் பெற்றோரை பலர் விமர்சித்து வருகின்றனர். அப்படி கமெண்ட் செய்பவர்களை சற்றும் கண்டுகொள்ளாத நேஹா, தன் குட்டி தங்கையின் பிறந்தநாளைப் பிரமாண்டமாக கொண்டாடி அசத்தி இருக்கிறார். நேஹாவின் குட்டி தங்கை ஷாஹிதியின் பிறந்தநாள் விழாவுக்கு பாக்கியலட்சுமி சீரியலின் மொத்த குடும்பமும் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!