சூர்யா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை- கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி!

அந்த வகையில் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருந்த நடிகர் சூர்யா சென்னை திரும்பியவுடன் கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு மரியாதை செலுத்தி விட்டு உட்கார்ந்து கண் கலங்கினார்.
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி!
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி! Twitter

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இவருடைய இறப்பிற்கு கமல்ஹாசன், விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தற்போது பலரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருந்த நடிகர் சூர்யா சென்னை திரும்பியவுடன் கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு மரியாதை செலுத்தி விட்டு உட்கார்ந்து கண் கலங்கினார்.

காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி தற்போது காமெடியனாக சினிமாவில் வலம் வரும் புகழ், விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரை சந்தித்த புகழ், நானும் விஜயகாந்த் ஐயாவை போலவே அனைவருக்கும் சாப்பாடு தர முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.

ஜெயம் ரவி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், சசிக்குமார், பிக்பாஸ் பூர்ணிமா ரவி ஆகியோர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவபடத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரபலங்கள் அஞ்சலி!
"கேப்டன் விஜயகாந்துக்கு மணிமண்டபம்" - பிரேமலதா விஜயகாந்த் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com