RIP மயில்சாமி : பிரபல நகைச்சுவை நடிகர் திடீரென காலமானார் - பிரபலங்கள் இரங்கல்

57 வயதான மயில்சாமி தீவிர சிவ பக்தர். அவர் சிவராத்தரியை ஒட்டி பூஜைக்கு சென்று வரும் வழியில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
RIP மயில்சாமி : பிரபல நகைச்சுவை நடிகர் திடீரென காலமானார் - பிரபலங்கள் இரங்கல்
RIP மயில்சாமி : பிரபல நகைச்சுவை நடிகர் திடீரென காலமானார் - பிரபலங்கள் இரங்கல்ட்விட்டர்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென நெஞ்சுவலி காரணமாக இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

57 வயதான மயில்சாமி தீவிர சிவ பக்தர். அவர் சிவராத்தரியை ஒட்டி பூஜைக்கு சென்று வரும் வழியில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாவணிக் கனவுகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மயில்சாமி, கன்னி ராசி, நான் அவனில்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் நாட்டம் கொண்டிருந்த அவர், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1965ஆம் ஆண்டு பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பிரபலமாகி 1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

RIP மயில்சாமி : பிரபல நகைச்சுவை நடிகர் திடீரென காலமானார் - பிரபலங்கள் இரங்கல்
Vivek : 'We Miss You Chinna Kalaivanar' - நகைச்சுவை நடிகர் விவேக் நினைவலைகள்...

மயில்சாமியின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

RIP மயில்சாமி : பிரபல நகைச்சுவை நடிகர் திடீரென காலமானார் - பிரபலங்கள் இரங்கல்
Crazy Mohan: நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகனின் must watch collection | Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com