பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது சேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்Twitter

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேசு உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இவர் ஏ1, டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது சேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சற்று முன்பு நடிகர் சேசு காலமானார். இந்த செய்தியறிந்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com