நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் இந்தி மொழியை இந்தியாவின் இணைப்பு மொழியாக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்திருந்தார்.
அதாவது, இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலம் மொழிக்கு பதிலாக இந்தியைக் கொண்டு வர வேண்டும் என அமித் ஷா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தி மொழியை திணிக்க முயல்வதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து கண்டன குரல்கள் கடுமையாக எழுந்தன.
அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல், திரைப்பிரபலங்களுக்கும் இந்த இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தவகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் தமிழன்னையின் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்டு இருந்தார்.
தமிழன்னை, கருப்பு நிறத்தில் ரௌத்திரமாக, கையில் ழகரத்தின் சூலம் ஏந்தி, காளியின் தோற்றத்தில் இருப்பதை போன்ற புகைப்படத்தை ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை சிலர் வரவேற்றாலும், எதிர்மறையான கருத்துக்களை சிலர் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் தமிழன்னை புகைப்படம் வெளியிட்ட ஏ.ஆர் ரகுமானுக்கு எதிராக அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகி முத்து ரமேஷ் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழன்னையை அவமதித்து தலைவிரி கோலத்திலும், கருப்பாகவும் காண்பித்து தமிழர்களின் மனதை புண்படுத்திவிட்டதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக ஏ.ஆர் ரகுமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் முத்து ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.