ஜெய் பீம் சர்ச்சை : சூர்யா - ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா- ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 Suriya - Jyothika
Suriya - JyothikaTwitter
Published on

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ’ஜெய் பீம்’ திரைப்படம் மக்களிடம் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை குறித்தும், அவர்களுக்கு நடந்த அநீதி குறித்தும் ஜெய் பீம் படத்தில் பேசப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கோரி போலீஸ் காவலில் அடித்தே கொல்லப்படுகிறார், அவரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் கொடூரமாகத் துன்புறுத்தப்படுவதை இப்படத்தில் காட்டிருப்பார்கள்.

jai bhim
jai bhimTwitter

மேலும் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் 1993ல் நடந்ததாக நிரூபிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இதற்கிடையே ஜெய் பீம் திரைப்படத்தில் சில காட்சிகள் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அதாவது, பச்சையம்மாள் என்ற பெயர் வன்னியர்களுக்கு மட்டுமே வைக்கப்படும் நிலையில் அந்த பெயரை இருளர் சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பெயர் வைத்ததன் மூலம் எங்கள் சமூகத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தி உள்ளதாகவும்

வன்னியர் சங்கத்தின் குறியீடான அக்னிக் குண்டத்தை அப்படத்தில் கொடூர போலீசாக நடித்திருந்தவர் வீட்டில் இடம்பெற்றதையும் சுட்டுக்காட்டினர்.

jai bhim
jai bhimTwitter

இது தொடர்பான ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் நாயகர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா- ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Suriya - Jyothika
சூர்யா எதற்கும் துணிந்தவன் : படத்தை வெளியிட வன்னியர் சங்கம் எதிர்ப்பு, இடதுசாரிகள் ஆதரவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com