தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து: 18 வருட மணவாழ்க்கை முறிவு - என்ன காரணம்?

ஐஸ்வர்யாவும், நானும் ஒரு தம்பதியாகப் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் எங்களைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எங்களுக்குத் தனிமையைக் கொடுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் - ஐஸ்வர்யா

Twitter

Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தனுஷ். இவர் தன் அண்ணன் செல்வராகவனின் படங்களில் நடிக்கத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவு பெரிய நாயகனாக வளர்ந்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு தனுஷ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இருவரும் பரஸ்பரமாக விகாரத்து பெறவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து தனுஷ் சமூக வலைத்தளங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>தனுஷ் - ஐஸ்வர்யா</p></div>

தனுஷ் - ஐஸ்வர்யா

Twitter

அதில், “18 வருடங்களாக நண்பர்களாக, இணையர்களாக, பெற்றோர்களாக, ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாக நாங்கள் இணைந்திருந்தோம். இந்தப் பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்பதாக இருந்தது. இன்று நாங்கள் எங்களுடைய பாதையில் பிரிந்து செல்லவேண்டிய இடத்தில் நிற்கிறோம்.

ஐஸ்வர்யாவும், நானும் ஒரு தம்பதியாகப் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளோம். தனிப்பட்ட முறையில் எங்களைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எங்களுக்குத் தனிமையைக் கொடுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போலொரு பதிவை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

என்ன காரணம்?

சமூக ஊடகங்களில் வழக்கம் போல இந்த பிரிவு குறித்து ஏராளமான கிசுகிசுக்கள் உலவுகின்றன. இது இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்று கருதாமல், மோசமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் அதே சமயம், சமூக உடகங்களில் பலர், யாரும் யாரையும் இங்கு Judge செய்ய வேண்டாம் என்று பதிவுகளும் இல்லாமல் இல்லை.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com