Dhanush இயக்கும் அடுத்த திரைப்படம் - வெளியான புதிய அப்டேட்!

தனுஷ் தான் இயக்கப்போகும் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் முழுநேர இயக்குநராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Dhanush இயக்கும் அடுத்த திரைப்படம் - வெளியான புதிய அப்டேட்!
Dhanush இயக்கும் அடுத்த திரைப்படம் - வெளியான புதிய அப்டேட்!Twitterர்

முன்னணி நடிகர் தனுஷ் சமீபத்தில் அவரே இயக்கும் D 50, DD 2 படத்தின் படப்பிடிப்பை முடித்தார்.

அதாவது அவர் நடிப்பில் வெளியாகும் 50வது படமாகவும் அவரது இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படமாகவும் அது அமைந்துள்ளது.

ஏற்கெனவே தனுஷ் பவர் பாண்டி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அதில் ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி நடித்திருப்பர். அந்த படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.

தனுஷின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகிவரும் டி50 அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் தனுஷ் தான் இயக்கப்போகும் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இரண்டு நிலவுகள் டிடி எனவும் பக்கத்தில் எண் 3ம் அமைந்துள்ளது. ஒரு கடற்கரை அருகில் உள்ள சாலையில் இரண்டு நபர்கள் இருக்கும் இருக்கை உள்ளது.

இது ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என்றும் காதல் படமாக இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. இந்த படம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் வரும் 24ம் தேதி வெளியாகும்.

Dhanush இயக்கும் அடுத்த திரைப்படம் - வெளியான புதிய அப்டேட்!
கேப்டன் மில்லர் : தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டீசர் - எப்படியிருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com