தளபதி 67? கைதி 2? சமூக வலைத்தளங்களிலிருந்து விலகிய லோகேஷ் - காரணம் என்ன?

தான் எடுக்கப்போகும் அடுத்தடுத்த படங்கள் இந்த LCUவிற்கு கீழ் வரும் என்றும் லோகேஷ் தெரிவித்திருந்தார். மார்வெல் யுனிவெர்ஸைபோல தமிழிலும் ஒரு யுனிவெர்ஸை உருவாக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
Lokesh Kanagaraj
Lokesh KanagarajTwitter
Published on

சமூக வலைத்தளங்களிலிருந்து பிரேக் எடுத்துக்கொள்வதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று பதிவிட்டிருந்தார். தனது அடுத்தப் படத்தின் அறிவிப்புடன் ரசிகர்களை சந்திப்பதாக லோகேஷ் பதிவிட்டிருந்தார்.

தமிழில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ். இயக்கிய நான்கு படங்களும் (மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்) சூப்பர் ஹிட்.

அதிலும் கடைசியாக கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 2022ன் அதிக வசூல் செய்த தமிழ் படமானது. மேலும் ஓடிடி தளத்திலும் அதிகமாகப் பார்க்கப்பட்ட படமாக ஆனது விக்ரம்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜயுடன் இணையும் லோகேஷ் கனகராஜ், தற்போது சமூக வலைத்தளங்களிலிருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார். நேற்று தன் டிவிட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டிருந்த லோகேஷ், எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

ரசிகர்களும், தரமான கதையுடன் வாருங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

விக்ரம் படத்தில், தனது முந்தைய படமான கைதியின் ரெஃபெரன்ஸ் வைத்ததன் மூலம் லோகி ஒரு சினிமாடிக் யுனிவெர்ஸை (LCU) உருவாக்கினார். மேலும் தான் எடுக்கப்போகும் அடுத்தடுத்த படங்கள் இந்த LCUவிற்கு கீழ் வரும் என்றும் லோகேஷ் தெரிவித்திருந்தார். மார்வெல் யுனிவெர்ஸைபோல தமிழிலும் ஒரு யுனிவெர்ஸை உருவாக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

விக்ரம் படத்திற்கு பிறகு தளபதி 67ல் விஜயுடன் இணைகிறார் லோகி. இந்த படத்தில் ஃபகத் ஃபாசிலும் இணையவுள்ளதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், இது LCUவின் அடுத்த படமாக இருக்கலாம் என்பது ரசிகர்களின் கணிப்பு! இது கைதி 2 விற்கான தயாரிப்பாகவும் இருக்கக்கூடும்...

கார்த்தி, கமலுடன், லோகியின் யுனிவெர்ஸில் விஜயும் இணையக்கூடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மாஸ்டர் திரைப்படத்திலும் விஜயின் கதாபாத்திரம் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக குரல் கொடுப்பதாகத் தான் இருந்தது. அதனால் ரசிகர்கள் கைதி டில்லி, விக்ரம், மற்றும் ஜே டி ஒரு அணியினர் என்பது போன்ற ஃபேன் தியரிக்களை புனைந்திருந்தனர். ஆனால், விக்ரமுக்கும் மாஸ்டருக்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை!

கைதி, விக்ரம் ஆகிய படங்களின் கதைக்களத்தை தளபதி 67ல் தற்போது இணைக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67ன் கதையில் கவனம் செலுத்துவதற்காகவே லோகேஷ் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுகிறார் என தகவல் வெளியாகியுள்ளன.

தளபதி 67 மட்டுமன்றி, கைதி படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்படும் என்று இயக்குநர் தெரிவித்திருந்தார். கைதி 2 வில் தான் டில்லி யார்? ஏன் சிறைக்கு சென்றான்? என்ற தகவல்கள் கிடைக்கும். அது கிடைத்தால், டில்லி, அடைக்கலம், விக்ரம், ரோலெக்ஸ் ஆகிய புள்ளிகளையும் இணைக்கலாம். உடன் தளபதியும் இணைவார்.

தன் அடுத்த படத்தின் அறிவிப்புடன் லோகேஷ் வரும் வரை, நமது ஃபேன் தியரிக்களை நாம் புனையலாம்!

Lokesh Kanagaraj
LCU : லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பது என்ன? அங்கு என்னென்ன நடக்கும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com